AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை.. 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!

Continuous Six Days Holidays Declared For Banks | அரசு பண்டிகை, திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், மார்ச் 30, 2026 முதல் ஏப்ரல் 05, 2026 வரை என மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை.. 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Mar 2026 11:47 AM IST

இந்தியாவில் அரசு பண்டிகைகள், மத பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின்போது வங்களுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். அந்த வகையில், மார்ச் 30, 2026 முதல் ஏப்ரல் 05, 2026 வரை என மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி தேவை உள்ள பொதுமக்கள் இந்த விடுமுறைக்கு ஏற்ப தங்களது திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 30 முதம் ஏப்ரல் 5 வரை – 6 நாட்கள் தொடர் விடுமுறை

மார்ச் 30, 2026 முதல் ஏப்ரல் 05, 2026 வரை மொத்தம் 6 நாட்கள் சில பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30, 2026 – மகாவீர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் கர்நாடாகாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2026 – மகாவீர் ஜெயந்தி என்பதால் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01, 2026 – ஆண்டு வங்கி கணக்கு முடியும் நாள் என்பதால் அன்றைய தினம் திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, சண்டிகர், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, கோவா, பீகார், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க பே ஸ்லிப் இல்லையா?.. கவலை வேண்டாம்.. இந்த அம்சங்கள் போதும்!

2 ஏப்ரல், 2026 – புனித வியாழன் என்பதால் அன்றைய தினம் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3 ஏப்ரல், 2026 – புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தராகண்ட், சிக்கிம், தெலங்கானா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், கேரளா, நாகாலாந்து, மேற்கு வங்கம், டெல்லி, கோவா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, ஹிமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 05, 2026 – ஈஸ்டர் பண்டிகை மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us