இனி ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் பணம் செலுத்த முடியாது – வெளியான அறிவிப்பு
Toll Rule Update : இந்தியாவில் டோல் பிளாசாக்களில் வரும் ஏப்ரல் 10, 20026 முதல் ஃபாஸ்டாக் மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணமாக செலுத்தும் முறை முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் டோல் பிளாசா. இந்த நிலையில் இதுவரை வாடிக்கையாளர்கள் ஃபாஸ்டேக் , யுபிஐ மற்றும் பணமாக கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இனி ஏப்ரல் 10, 2026 முதல் பணம் செலுத்துவதற்கு முற்றிலும் நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஏப்ரல் 10, 2026க்கு பிறகு இனி அனைத்து டோல் பிளாசாக்களிலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் பணம் செலுத்த முடியாது
அதன் படி, இனி டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்த ஃபாஸ்டாக் மற்றும் யுபிஐ போன்ற முறைகள் பயன்படுத்தப்ட வேண்டும். பணம் செலுத்தி கட்டணம் செலுத்தும் முறை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் டோல் பிளாசாகளில் பணமாக செலுத்துவதால் பின்னால் நிற்கும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். குறிப்பாக எல்லோரிடம் கட்டணத்துக்கு ஏற்ப சரியான கட்டணம் இருக்காது. பணத்தை மாற்றி கொடுப்பதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதன் காரணமாகவே பணம் செலுத்தும் முறை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தனால் கூட்ட நெரிசல் முற்றிலும் குறையும்.
இதையும் படிக்க : 72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்.. FASTag புதிய ரூல்ஸ்!




நாடு முழுவதும் சுமார் 1,150 டோல் மையங்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த அறிவிப்புடன் நாட்டில் சில இடங்களில் டோல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1.5 சதவிகிதம் முதல் 3.5 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் கார் மற்றும் எஸ்யுவி வாகனங்களுக்கு டோல் பிளாசா கட்டணம் ரூ.665ல் இருந்து ரூ.675 ஆக உயர்த்தப்ட்டுள்ளது. அதே போல இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.330 ரூபாயில் இருந்து ரூ. 335 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோரக்பூர் லிங்க் எக்ஸ்பிரஸ்வேயில் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.195 ஆகவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.145 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நீங்கள் இளம் வயதில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்!
இந்த அறிவிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் தங்களின் ஃபாஸ்டாக் கணக்குகளை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இதனால் நம் பயணம் தடையின்றி தொடர முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் டோல் பிளாசா முற்றிலும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் இந்த முயற்சி ஆரம்பத்தில் சிக்கலாக தோன்றினாலும் நீண்ட காலத்தில் அது நம் பயணத்தை எளிதாக மாற்றும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.