Gold Price : ஒரே நாளில் ரூ.800 உயர்ந்த தங்கம்.. வெள்ளி விலை நிலவரம் என்ன?
Gold Price Hiked and Silver Price Remain Same | சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 04 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது. அந்த வகையில் , இன்று (ஏப்ரல் 04, 2026) தங்கம் விலை (Gold Price) உயர்வை சந்தித்துள்ளது. வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்
ஈரான் போரால் சர்வதேச அளவில் புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என ஏராளமான சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் போரால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : டிரெண்டாகும் ஒரு வார விதி – ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் – என்ன செய்ய வேண்டும்?




கடந்த 10 நாட்களுக்கான தங்கம், வெள்ளி விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 26 மார்ச் 2026 | ரூ.13,350 | ரூ.1,06,800 |
| 27 மார்ச் 2026 | ரூ.13,430 | ரூ.1,07,440 |
| 28 மார்ச் 2026 | ரூ.13,660 | ரூ.1,09,280 |
| 29 மார்ச் 2026 | ரூ.13,660 | ரூ.1,09,280 |
| 30 மார்ச் 2026 | ரூ.13,770 | ரூ.1,10,160 |
| 31 மார்ச் 2026 | ரூ.13,670 | ரூ.1,09,360 |
| 01 ஏப்ரல் 2026 | ரூ.14,050 | ரூ.1,12,400 |
| 02 ஏப்ரல் 2026 | ரூ.13,750 | ரூ.1,10,000 |
| 03 ஏப்ரல் 2026 | ரூ.13,850 | ரூ.1,10,800 |
| 04 ஏப்ரல் 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் படி, ஈரான் போர் காரணமாக சென்னையில் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : 72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்.. FASTag புதிய ரூல்ஸ்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.