AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. கூடுதல் லாபம் பெறலாம்!

PPF Investment Trick | இந்தியர்கள் மிக ஆர்வமாக முதலீடு செய்யும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய மாற்றம் மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. கூடுதல் லாபம் பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Apr 2026 11:49 AM IST

தங்களது பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து, அதற்கான லாபத்தை பெற வேண்டும் என நினைக்கும் நபர்கள் முதலில் தேர்வு செய்வது பிபிஎஃப் (PPF – Public Provident Fund) திட்டத்தை தான். இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதன் காரணமாக இதில் எந்த வித சிக்கலும் ஏற்படாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பலரும் இதில் முதலீடு செய்கின்றனர். இது ஒரு சிறந்த திட்டமாக இருந்தாலும், இதில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் ஒரு சிறிய தவறை செய்கின்றனர். அந்த தவறை திருத்தி சரியான முறையில் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களால் கூடுதல் லாபம் பெற முடியும். அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பழைய வரி முறையில் EEE வரி சலுகை வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டுக்குமே வரி சலுகை வழங்கப்படும். நீண்ட கால முதலீடாக பார்க்கப்படும் இந்த திட்டம், ஓய்வு காலத்திற்கு ஏற்ற மிக சிறந்த முதலீடாகவும் உள்ளது.

இதையும் படிங்க : டிரெண்டாகும் ஒரு வார விதி – ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் – என்ன செய்ய வேண்டும்?

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது தெரிந்துக்கொள்ள வேண்டியது

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும் பலரும் இந்த 5 ஆம் தேதி விதி குறித்து தெரிந்துக்கொள்ளாமலே முதலீடு செய்கின்றனர். அதாவது பிபிஎஃப் திட்ட விதிகளை பொருத்தவரை, வட்டி கணக்கிடப்படும்போது அந்த மாதத்தின்  5 ஆம் தேதி முதல் இறுதி வரை உள்ள குறைந்தபட்ச தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, நீங்கள் பிபிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் ரூ.5,000 முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் அதனை ஏப்ரல் 04 ஆம் தேதிக்குள்ளாக முதலீடு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : 72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்.. FASTag புதிய ரூல்ஸ்!

காரணம், 04 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால் ஏப்ரல் மாதத்திற்கான வட்டி, மொத்த தொகையான ரூ.1.5 லட்சத்திற்கு கணக்கிடப்படும். இதையே ஏப்ரல் 05 ஆம் தேதிக்கு பிறகு முதலீடு செய்தால் பழைய இருப்பான ரூ.1 லட்சத்திற்கு மட்டுமே வழங்கப்படும். எனவே பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ முதலீடு செய்கிறீர்கள் என்றால் 05 ஆம் தேதிக்குள் செய்வது சிறப்பானதாக இருக்கும்.

Follow Us