AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெறும் ரூ.666 முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. SIP-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!

Create 1 Crore Rupees Money With SIP Investment | சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இந்த நிலையில், எஸ்ஐபியில் தினமும் ரூ.666 முதலீடு செய்து ரூ.1 கோடி உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.666 முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. SIP-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2026 13:05 PM IST

மனிதர்களின்  வாழ்வில் சேமிப்பு (Saving) மற்று முதலீடு (Investment) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. சேமிப்பு மற்றும் முதலீடு செய்யவில்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பண தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும். இதன் காரணமாக தான் சேமிப்பு மற்றும் முதலீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய தங்களிடம் போதிய அளவு பணம் இல்லை என நினைத்து எந்த முயற்சியும் எடுக்காமலே இருந்துவிடுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை.  மிக குறைந்த அளவிலான பணத்தை வைத்து கூட சேமிப்பு மற்றும் முதலீட்டை செய்யலாம். அதன்படி, வெறும் ரூ.666 முதலீட்டில் ரூ.1 கோடியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.666 முதலீடு செய்து ரூ.1 கோடி உருவாக்கலாம்

தற்போது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு முதலீட்டு திட்டம் என்றால் அது எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் முலம் சிறந்த லாபத்தை பெற முடியும். அந்த வகையில், எஸ்ஐபியில் மாதம் ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1 கோடியை உருவாக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறுத்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

16 ஆண்டுகளில் ரூ.1 கோடி இலைக்கை அடையலாம்

ஒரு நபர் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய எஸ்ஐபி திட்டத்தில் மாதம் ரூ.20,000 முதலீடு செய்கிறார் என்றால் அவர் வெறும் 16 ஆண்டுகளில் நினைத்த இலக்கை எட்டிவிட முடியும். அதாவது அந்த நபர் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.20,000 முதலீடு செய்துக்கொண்டே வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த நபர் முதலீடு செய்த தொகை ரூ.36 லட்சமாக இருக்கும். அந்த முதலீட்டுக்கான லாபம் ரூ.64 லட்சமாக இருக்கும். அதன்படி, 16 ஆண்டுகளில் முதலீடு மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து ரூ.1 கோடியாக மாறும்.

இதையும் படிங்க : UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாதத்திற்கு ரூ.20,000 என்றால் ஒரு நாளுக்கு ரூ.666 மட்டும் செலுத்தினால் போதும். எனவே இந்த சிறிய முதலீட்டின் மூலம் பெரிய இலக்கை அடையலாம்.

Follow Us