ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி வெளியிட்ட எச்சரிக்கை
SBI Customer Alert : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 11, 2026 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் சேவைகள் , YONO செயலிகளுக்கு ஓடிபி கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற ஏப்ரல் 11, 2026 அன்று அதிகாலை ஓடிபி சேவைகளில் தடங்கல் ஏற்படலாம் என ஸ்டேட் பேங்க் எச்சரித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளை பயன்படுத்து இந்த அறிவிப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. குறிப்பாக அதிகால நேரத்தில் பணப்பரிவர்த்தனை செய்ய திட்டமிட்டவர்கள் முன்கூட்டியே மேற்கொள்ளுமாறும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறும் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ ஓடிபி சேவைகள் பாதிக்கப்படலாம்
இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட தகவலின் படி ஏப்ரல் 11, 2026 அதிகாலை 2.30 மணி முதல் 2.50 மணி வரை ஓடிபி அடிப்படையிலான சேவைகளில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 20 நிமிடங்களில் எஸ்பிஐ இண்டர்நெட் பேங்கிங் சேவை, எஸ்பிஐயின் செயலிகளான YONO Lite, YONO App ஆகிய சேவைகளை பயன்படுத்தும் போது ஓடிபி கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : கிரெடிட் கார்டு.. தேவையில்லாத கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?




என்ன காரணம்?
ஸ்டேட் பேங்க் தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக பரமாரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. குறிப்பாக பாதுகாப்பு மேம்பாடு, தொழில்நுட்ப செயல்திறனை அதிகரிப்பது, வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை மேம்படுத்துவது போன்ற நோக்கங்களுக்கு இந்த பணிகள் மேற்கொள்ப்படுகின்றன.
இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்திலும் வாடிக்கையாளர்கள் சில மாற்று வழிகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என வாடிக்கையாளர்கலுக்கு ஸ்டேட் வங்கி அறிவுத்துள்ளது. அதன் படி, ஏடிஎம் சேவை, யுபிஐ, எஸ்பிஐ அந்தெட்டிகேஷன் செயலி ஆகிய சேவைகள் வாடிக்கையாளர்கள் தடையின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : EPFO 3.0: யுபிஐ முதல் ஏடிஎம் வரை – பிஎஃப் திட்டத்தில்10 முக்கிய மாற்றங்கள்
SBI Secure OTP என்றால் என்ன?
SBI Secure OTP என்பது ஓடிபி உருவாக்கும் சிறப்பு செயலியாகும். இதன் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, யோனோ லைட் செயலி போன்ற சேவைகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் ஓடிபி சேவைகளுக்கு காத்திருக்கலாம். உடனடியாக ஓடிபி பெறலாம். .
இதற்காக வாடிக்கையாளர் எஸ்பிஐ செக்யூர் ஓடிபி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பயனர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவும். பின்னர் மொபைல் எண்ணை சரிபார்க்க எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பி்னர் பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி மூலம் உறுதிபடுத்தவும். எம்பின் அமைக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் எஸ்பிஐ மூலம் இந்த சேவையை செயல்படுத்தவும். இதன் மூலம் வருங்காலங்களில் ஓடிபி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் இந்த செயலி மூலம் ஓடிபி பெறலாம்.