AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை இப்போது மாற்ற முடியுமா? மத்திய அரசு விளக்கம்

Fact Check Alert : பழைய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை இப்போது மாற்ற முடியுமா? மத்திய அரசு விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Apr 2026 15:31 PM IST

இந்தியாவில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மீண்டும் மாற்றிக்கொள்ளலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பிரஸ் இன்ஃபெர்மேஷன் பியூரோ தனது ஃபேக்ட் செக் பிரிவு மூலம் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள புதிய விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் பிஐபி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 8, 20216 அன்று மத்திய அரசு பழைய ரூ.5000 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை இப்போது மாற்ற முடியுமா?

இந்த நிலையில் அந்த நேரத்தில் பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மையங்களில் அந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது. அந்த காலக்கெடு முடிந்ததும், பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டது. இதனையடுத்து பழைய நோட்டுக்களை கண்டுபிடித்து மாற்றிக்கொள்ள முயன்றாலும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிக்க : கார் லோன் வாங்கப்போறீங்களா? குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் – தேர்வு செய்வது எப்படி?

பிஐபி விளக்கம்

 

கடந்த சில நாட்களாக பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மீண்டும் மாற்றிக்கொள்ளலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் இது முழுமையான போலி தகவல் என பிஐபி தெளிவாக விளக்கமளித்துள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளம் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை சரிபார்க்காமல் பகிர வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க : இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்பட்டால் பொது மக்கள் +91 8799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும், factcheck@pib.gov.in என்ற இமெயில் முகவரிக்கும் உங்கள் சந்தேகங்களை அனுப்பி உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதிலிருந்து பழைய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் முடிந்ததால், இப்போது மாற்றிக் கொள்ள முடியாத என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் மக்கள் உண்மையான தகவல்களை ட்டுமே நம்ப வேண்டும் என்றும் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விளக்கமளித்துள்ளது.

Follow Us