AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாத கடையில் பாக்கெட்டை காலியாக்கும் யுபிஐ.. குவிக் பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள்!

UPI Payment Method Issue | பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், யுபிஐ மூலம் ஏற்படும் பண சிக்கல் குறித்து பலரும் தெரிந்துக்கொள்ளாமல் உள்ளனர். அது என்ன, அதன் பாதிப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாத கடையில் பாக்கெட்டை காலியாக்கும் யுபிஐ.. குவிக் பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Apr 2026 16:29 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த யுபிஐ பண பரிவர்த்தனை மிக எளிதாக தோன்றினாலும் மாத இறுதியில் கையில் பணம் இல்லாமல் நிற்கும்போதுதான் அதன் உண்மையான நிலவரம் தெரியும். பெரும்பாலான இந்தியர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையான இது உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது யுபிஐ

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்து வாங்க வேண்டும். ஆனால், தற்போது கையில் பணம்  வைத்திருப்பதற்கான தேவையே இல்லாமல் உள்ளது. அதாவது ஒரே ஒரு ஸ்கேனில் எவ்வளவு பணம் செலுத்த விரும்புகிறோமோ அதனை சிங்கில் கிளிக் மூலம் செய்து முடித்துவிடலாம். இது மிகவும் சுலபமாக இருப்பதன் காரணமாக பலரும் இந்த அம்சத்தை பயன்படுத்தி பேமெண்ட்டுகளை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : உங்கள் குழந்தையின் கல்லூரி செலவுக்கு ரூ.1 கோடி உருவாக்க வேண்டுமா?.. இப்படி முதலீடு செய்யுங்கள்!

நொடி பொழுதில் பண பரிமாற்றம் செய்ய முடியும்

தற்போதைய சூழலில் சிறிய மளிகை கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை உள்ளது. இந்த சூழலில் சரியான கட்டணத்தை செலுத்தவும், சில்லறை உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கவும், நொடி பொழுதில் பணத்தை பரிமாற்றம் செய்யவும் பலரும் யுபிஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர். இது பயன்படுத்துவதற்கு மிக எளிதாக தோன்றினாலும் இதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

இதையும் படிங்க : தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. 16 ஆண்டுகளில் அதிக லாபம் தந்தது எது?

பணத்தை குடிக்கும் யுபிஐ

கையில் பணத்தை வைத்து செலவு செய்யும்போது எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம், எந்த எந்த தேவைகளுக்காக பணத்தை செலவு செய்கிறோம், கையில் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து தெரியவரும். ஆனால், இந்த யுபிஐ பண பரினர்த்தனைகளில் அது எதுவும் தெரியாது. இதன் காரணமாக, அதிக அளவு பண பரிவர்த்தனை செய்ய நேரிடும். இதன் விளைவாக மாத கடைசியில் பண பற்றாக்குறை ஏற்படும். இதுதான் தற்போதையன் இளைய சமூதாயத்தினர் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

Follow Us