AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி

Special Trains for Summer : கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல ரயில் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே அமைச்சகம் 18,262 சிறப்பு ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது.

கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Apr 2026 18:00 PM IST

இந்த ஆண்டின் கோடைகாலம் தொடங்கியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க ஜூலை 15, 2026 அன்று வரை சிறப்பு ரயயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் தகவலை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

இதன் படி கோடைகாலத்துக்காக மட்டும் 908 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் 18,626 முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11,878 ரயில்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே மண்டலங்களில் அதிக அளவில் ரயில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : பொதுப் பெட்டிகள் ஏன் ரயிலின் முன் மற்றும் பின்பகுதியில் மட்டும் அமைந்துள்ளன?

மேலும் புதுடெல்லி, மும்பை, சூரத், அகமதாபாத், சென்னை, பெங்களூரு நகரங்களில், கூடுதல் பணியாளர்கள் நியமணம், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகளுக்கா கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் காத்திருப்பு காலம் குறையும். மேலும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில்ஒன் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்

இதற்கிடையில் ஏப்ரல் 25, 2026 அன்று நாளை சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு இல்லை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். அதே போல திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 26, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டை விட மிகப்பெரிய அளவில் ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் 6,369 ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு 18,262 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதன.

இதையும் படிக்க : ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?

இதில் தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு மண்டலத்திற்கு மட்டும் 1300க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆந்திரா – தெலங்கானா பகுதிகளில் அதிகபட்சமாக 124 ரயில்கள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயன்பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்கா குடிநீர் திட்டம் மற்றும் மலிவு விலை உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Follow Us