AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?

Payment Safety Explained : ஆன்லைனில் நாம் வாங்கும் பொருட்களுக்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முற்பட்டால் முதலில் நம் கணக்கில் ரூ.1 எடுக்கப்படுவதை கவனித்திருப்போம். இது பாதுகாப்பானதா? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Apr 2026 15:51 PM IST

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலும் ஆன்லைனிலேயே பொருட்களை வாங்க தொடங்கியிருக்கிறோம். வீடுகளுக்கே நம் கேட்கும் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதால், கடைகளில் ஏறி இறங்கும் அலைச்சலம் நமக்கு குறைகிறது. ஆன்லைனிலேயே கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது யுபிஐ செயலிகள் மூலமாகவோ பணம் அனுப்பிக்கொள்ளலாம் என்பதால் பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். ஆன்லைன் பேமென்ட் செய்ய புதிய டெபிட் அல்லது கிரெடிட் கார்டை இணைக்கும் போது ரூ.1 நம் கணக்கில் இருந்து எடுக்கப்படுவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது ஏன் எடுக்கப்படுகிறது மற்றும் இது பாதுகாப்பானதாக என்பது குறித்து பார்க்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்?

நீங்கள் ஒரு புதிய கார்டை ஷாப்பிங் செயலிகள் அல்லது வலைத்தளத்தில் பணம் செலுத்துவதற்காக இணைக்கும்போது, அந்த கார்டு செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க ஒரு சிறிய பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதற்காகவே நம் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 எடுக்கப்படுகிறது. அப்படி ரூ.1 எடுப்பது நம் செலவாக இருக்காது. நாம் இணைக்கும் கார்டு சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்ப்பதற்காக எடுக்கப்படுகிறது.

இதையும் படிக்க : தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தாண்டும்.. முக்கிய நபர் சொன்ன ஷாக் தகவல்!

அதாவது நம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்படி நம்மிடம் இருந்து எடுக்கப்படும் ரூ.1 பணம் சில நிமிடங்களிலோ அல்லது சமயங்களில் சில நாட்களிலோ நம் வங்கி கணக்கிற்கு திருப்பி அளிக்கப்படும். இந்த பணத்தை எந்த நிறுவனமும் உரிமை கொள்ள முடியாது.

இந்த செயல்முறை ஒரு பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவறான கார்டு சேர்க்கப்படுவதை தடுக்கும். மோசடி பரிவர்த்தனைகளை குறைக்கும் . நீங்கள் கார்டு விவரங்கள உள்ளிடம் போது அந்த தகவல்கள் பாதுகாப்பான முறையில் விசா அல்லது மாஸ்டர்கார்டு போன்ற பேமெண்ட் நெட்வொர்க்குகள் மூலம் உங்கள் வங்கிக்கு அணுப்பப்படுகிறது. வங்கி அந்த ரூ. 1 பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டால் உங்கள் கார்டு ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்த தயாராக உள்ளது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : குடியிருப்பு Vs வணிக ரியல் எஸ்டேட்.. எதில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை கொடுக்கும்?

இப்படி நம்மிடம் இருந்து பெறப்படும் ரூ.1 என்பது குறித்து நம் பயப்படத் தேவையில்லை. மேலும் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்காக டெபிட் கார்டை இணைக்கும் போது 1 ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது நம் பணம் சில நாட்களாகியும் திரும்பி வராவிட்டால் நம் வங்கியை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக நம்பகமான வலைதளங்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

Follow Us