குடியிருப்பு Vs வணிக ரியல் எஸ்டேட்.. எதில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை கொடுக்கும்?
Commercial Vs Residential Investing | ரியல் எஸ்டேட் முதலீடு மொத்தம் இரண்டு வகையாக உள்ளது. ஒன்று குடியிருப்பு ரியல் எஸ்டேட் மற்றொன்று வணிக ரியல் எஸ்டேட். இந்த இரண்டு வகை ரியல் எஸ்டேட் முதலீடுகளில் எது சிறந்த லாபத்தை கொடுக்கும்.
நிதி பாதுகாப்பை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும் என்பது பிரதானமாக உள்ளது. முதலீட்டுக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. அதில் சிறந்தவற்றை தேர்வு செய்து முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும். அத்தகைய முதலீட்டு அம்சங்களில் முக்கியமான ஒன்று தான் ரியல் எஸ்டேட் (Real Estate). ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த காலக்கட்டத்தில் அதிக லாபத்தை பெற முடியும். ஆனால், ரியல் எஸ்டேட்டில் சிறந்த முறையில் முதலீடு செய்வது எப்படி என தெரியாமல் பலரும் குழும்புகின்றனர். இந்த நிலையில், வணிகம் மற்றும் குடியிருப்பு இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை கொடுக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வணிகம் மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் லாபங்களுக்கான வித்தியாசங்கள்
உதாரணமாக ஒருவர் ரூ.50 லட்சத்திற்கு ஒரு பிளாட்டை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருமானம் கிடைக்கும். இதுவே ஒருவர் வணிக கட்டங்களில் முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும். அதாவது குடியிருப்பு முதலீட்டில் கிடைப்பதை விட 2 முதல் 3 மடங்கு அதிக லாபம் கிடைக்கும். ஆனால், குடியிருப்புகளை விடவும் இந்த வணிக வளாகங்கள் அல்லது கட்டடங்களில் முதலீடு செய்வதில் அதிக சிக்கல்கள் இருக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – ஊதியம் எவ்வளவு உயரும்?




வணிக ரியல் எஸ்டேட் முதலீடு – எவ்வளவு லாபம் பெறலாம்?
குடியிருப்புகள் 2 முதல் 4 சதவீதம் வரை லாபம் வழங்கும் நிலையில், வணிக கட்டடங்கள் 6 முதல் 10 சதவீதம் வரை லாபம் வழங்கும். அந்த வகையில் குடியிருப்புகளை விடவும் வணிக கட்டடங்கள் அதிக லாபத்தை கொடுக்கின்றன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், அது எந்த தொழிலுக்காக பயன்படுத்தப்படுகிறது, எந்த இடத்தில் உள்ளது என்பதை பொருத்து தான் லாபம் தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அதிக அளவு லாபத்தை கொடுக்கும் வகையில், மற்ற இடங்களில் இருக்கும் கட்டடங்கள் லாபத்தை கொடுக்குமா என்பது கேள்விக்குறி தான் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : கார் லோன் வாங்கப்போறீங்களா? குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் – தேர்வு செய்வது எப்படி?
குடியிருப்பு ரியல் எஸ்டேட் முதலீட்டை விடவும், வணிக ரியல் எஸ்டே முதலீடு அதிக லாபத்தை வழங்கினாலும் அதில் பல சிக்கல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.