AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!

Vivo Launched Vivo X Fold 6 Smartphone In China | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!
விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2026 22:46 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் முக்கியமான ஒரு நிறுவனமாக உள்ளது தான் விவோ (Vivo). காரணம், இந்தியர்கள் மத்தியில் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு பொதுமக்கள் மத்தில் விவோ ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை (Vivo X Fold 6 Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மாட்போன் 8.02 இன்ச் மடிக்க கூடிய OLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?

விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh சிலிக்கான் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 7,999 யென் ஆக உள்ளது. அதாவது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,10,966-க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 10,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,584 ஆகும். மேலும், 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 11,299 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,56,768 ஆகும்.

Follow Us