WhatsApp : விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாட்ஸ்அப்பின் Username அம்சம்.. எப்படி செயல்படும்?
WhatsApp Soon To Introduce Username Feature | வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், யூசர் நேம் என்ற புதிய அம்சம் அமலுக்கு வர உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தாதவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. காரணம், உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் இதில் கிடைப்பதன் காரணமாக பலரும் இதனை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் யூசர் நேம் (Username) அம்சம். இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய Username அம்சம் எப்படி செயல்படும்?
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை தெரிவிக்காமலே ஒருவருடன் உரையாடுவதற்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒருவர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது அவரது எண் பதியப்படவில்லை என்றால் அவரட்து மொபைல் எண் தோன்றும். அவ்வாறு மொபைல் எண் தோன்றுவதில் தான் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சத்தின் மூலம் மொபைல் எண்ணுக்கு பதிலாக Username தோன்றும். இந்த அம்சத்தை மெட்டா சோதனை செய்து வரும் நிலையில், அது விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்




பயனர்கள் யூசர் நேம்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்
பயனர்கள் தங்களது யூசர் நேம்களை முன்பதிவு செய்துக்கொள்ள வாட்ஸ்அப் அனுமதி வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காரணம், தற்போது இந்த செயலிக்கு உலக அளவில் சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். எனவே அனைத்து பயனர்களும் தங்களுக்கு தேவையான பெயர்களை பதிவு செய்துக்கொள்ள இந்த அம்சத்தை வழங்க மெட்டா திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இன்ஸ்டாகிராமில் உள்ளதை போலவே யூசர் நேம்களை வாட்ஸ்அப்பில் சர்ச் செய்ய முடியாது என்றும், ஒருவரின் யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே அவரை தொடர்புக்கொள்ள முடியும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.