ஏஐ இடம் நீங்கள் வழங்கும் தரவுகள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளதா? .. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Data Providing To Artificial Intelligence | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஏஐ-ல் நீங்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பானதா, நீங்கள் வழங்கும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமன்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் மிக முக்கிய அங்கமாக ஏஐ மாறியுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்திடம் நாம் வழங்கும் தகவல்கள் என்னவாகின்றன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.
செயற்கை நுண்ணறிவிடம் வழங்கும் தகவல்கள் என்னவாகின்றன?
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடிதம் எழுதுவது, தகவல்களை தெரிந்துக்கொள்வது, நேர்காணலுக்கு தயாராவது, தேர்வுக்கு தயாராவது என அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவிடம் செல்கின்றனர். இன்னும் குறிப்பாக சிலர், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை தங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டியாக பார்க்கின்றனர்.
இதையும் படிங்க : சாது மிரண்டால்… இல்லை, ‘ஏஐ’ மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!




அதாவது, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்வது, உறவுகள் குறித்த குழப்பங்களுக்கு தீர்வு கேட்பது, புகைப்படங்களை பகிர்வது என பலவற்றை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செயற்கை நுண்ணறிவிடம் தகவல்களை பகிரும் மனிதர்கள் தங்களது தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து யோசிப்பதே கிடையாது. உண்மையாகவே நாம் வழங்கும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா?
தகவல்களை சேகரித்து வைக்கும் ஏஐ
- நீங்கள் ஏஐ இடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, நீங்கள் வழங்கும் தகவல்களை ஏஐ சேகரித்து வைத்துக்கொள்ளும்.
- பல ஏஐ நிறுவனங்கள், மனிதர்கள் வழங்கும் தரவுகளை சரிபார்க்க ஊழியர்களை பணியில் வைத்துள்ளன. இதன் காரணமாக நீங்கள் வழங்கும் தகவல்களை மூன்றாவது நபர் படிக்கும் வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் ஒருமுறை ஏஐ-க்கு ஏதேனும் தகவலை கொடுத்துவிட்டால், அதனை அதன் மெமரியில் இருந்து அழிப்பது மிகவும் கடினம். வரும்காலங்களில் வேறு யாரேனும் நீங்கள் தகவல் வழங்கிய தலைப்பு குறித்து கேள்வி கேட்டால் அது உங்களை பற்றிய தகவல்களைன் வழங்கும்.
இதையும் படிங்க : இனி மோசடிக்காரர்களிடம் இருந்து மெசேஜ் வந்தால் வாட்ஸ்அப் எச்சரிக்கும் – அறிமுகமாகும் புதிய அம்சம்
ஏஐ இடம் நீங்கள் தகவல்களை பகிர்வதன் மூலம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.