AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 28, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jun 2026 20:10 PM IST

சென்னை, ஜூன் 28 : மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 28, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள் என்று பேசினார்.

‘எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்’

நிகழ்ச்சியில் பேசிய அவர்,  75 ஆண்டு கால பவள விழா காணும் திமுக, 6 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பேரியக்கம். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞர் அரை நூற்றாண்டு காலம் தாங்கிப் பிடித்த இந்த மாபெரும் இயக்கத்திற்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் பேசிய அவர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் முதல்முதலில் சட்டமன்ற உறுப்பினராக எம்ஜிஆர் வெற்றி பெற்றார். தனி கட்சி தொடங்கி முதலமைச்சராக இருந்தபோதும், சட்டமன்றத்தில் ஒருவர் கலைஞர் பெயரை குறிப்பிட்டு பேசியபோது அதை கண்டித்தார். அப்போது, “உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம். எனக்கு தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி பேசியவரிடம் வார்த்தையை வாபஸ் வாங்க சொன்னார் எம்ஜிஆர். இது வரலாறு என்றார்.

நான் இளைஞனாக இருந்த போது சைதாப்பேட்டையில் ஒரு நாடகம் நடத்தினேன். அதற்கு எம்ஜிஆர் தலைமை தாங்கினார். அவர் முன்னால் சேர் போட்டிருந்தாலும், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாது என்று அந்தச் சேரை அப்புறப்படுத்திவிட்டுத் தரையில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்தார். அந்த வரலாற்றையெல்லாம் கடந்து, இன்று நான் கட்சியின் தலைமைத் தொண்டனாக உங்கள் அனைவரையும் வரவேற்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று பேசினார்.

மேலும், ஆளுங்கட்சியில் நடக்கும் முறைகேடுகள், மின்வெட்டு, விவசாயிகளின் போராட்டம் என மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதிலேயே அரசு குறியாக இருக்கிறது. ஆனால், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.

திமுக வெல்ல வேண்டும், ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில் வண்டி ஓடுகிறது; வண்டி எப்போது நிற்கும் என தெரியாது. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம், 100% திமுக தயாராக இருக்க வேண்டும் என்றார்.

 

Follow Us