யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – அதிக ரத்தப்போக்கு… பெண் பரிதாப மரணம்
திருப்பூர் அருகே பெண்ணுக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்க முயன்ற நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்ததால், தங்களது 2வது குழந்தை சுகபிரசவத்தில் பிறகக வேண்டும் என கணவன் - மனைவி முடிவெடுத்திருக்கின்றனர்.
திருப்பூர், ஜூன் 28 : திருப்பூர் அருகே பெண்ணுக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்க முயன்ற நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சசிகலாவுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்தது. இதனையடுத்து தங்களது 2வது குழந்தை சுகபிரசவத்தில் பிறகக வேண்டும் என இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர்.
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்
இதனயடுத்து யூடியூபில் வீட்டிலிருந்தே சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி என தொடர்ந்து வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்னர். இந்த நிலையில் தான் சசிகலாவிற்கு கடந்த ஜூன் 24, 2026 புதன்கிழமை என்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து யூடியூப் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு பிரசவம் பார்க்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து சசிகலாவின் கணவர் கார்த்திக் மற்றும் அவரது மாமியார் இருவரும் சேர்ந்து சசிகலாவிற்கு பிரசவம் பார்க்க தொடங்கினர்.
இதையும் படிக்க : யார் இந்த பி.டி. அரசகுமார்? நர்சரி ஸ்கூலில் தொடங்கி ரூ.100 கோடி மோசடி வரை.. திடுக்கிடும் பின்னணி!




ஆண் குழந்தை
இதனையடுத்து சசிகலாவிற்கு சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் சசிகலாவிற்கு பிரசவத்தின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது இயல்பு என இருந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில் சசிகலாவை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சசிகலாவை அழைத்து செல்ல கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அங்கு அழைத்து சென்ற அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சசிகலா ஜூன் 28, 2026 பரிதாபமாக உயிரிழந்தார்
இதையும் படிக்க : டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்… பெண்ணிடம் ரூ.2 கோடி பறித்த இளைஞர் கைது
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து ஊத்துக்குளி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான கணவர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது தவறு என அரசு பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது. இதனையடுத்து யாரும் யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.