யார் இந்த பி.டி. அரசகுமார்? நர்சரி ஸ்கூலில் தொடங்கி ரூ.100 கோடி மோசடி வரை.. திடுக்கிடும் பின்னணி!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியார் பள்ளிகள் எதிர்கொண்டு வரும் அங்கீகாரம் மற்றும் டிடிசிபி (DTCP/CMDA) அனுமதி தொடர்பான சிக்கல்களைப் பயன்படுத்தி, பி.டி.அரசகுமார் தனது அரசியல் மற்றும் அரசு அதிகாரத்துவ செல்வாக்கைக் காட்டி நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசின் அங்கீகாரம், கட்டிட அனுமதி மற்றும் தகுதி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், திமுக நிர்வாகியான பி.டி. அரசகுமார் (59) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பி.டி. அரசகுமார் , ஆரம்பகாலத்தில் நர்சரிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி, பின்னர் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அங்கீகரிக்கப்படாத அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அரசியல் ரீதியாக 1990 முதல் 2000 வரை திமுகவில் இருந்த இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டில் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் நிர்வாகியாகச் செயல்பட்டு வந்தார்.
இதையும் படிக்க : மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
காவல் ஆணையரிடம் மோசடி புகார்:
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியார் பள்ளிகள் எதிர்கொண்டு வரும் அங்கீகாரம் மற்றும் டிடிசிபி (DTCP/CMDA) அனுமதி தொடர்பான சிக்கல்களைப் பயன்படுத்தி, பி.டி.அரசகுமார் தனது அரசியல் மற்றும் அரசு அதிகாரத்துவ செல்வாக்கைக் காட்டி நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பு என அங்கீகாரம் பெறாத சங்கத்தை வைத்துக்கொண்டு அதன் தலைவராக செயல்பட்டு அரசகுமார் மற்றும் அதன் பொருளாளராக முத்துக்குமார் என்பவர் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவரிடம் கொடுத்த சுமார் 100 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர் அனுமதியும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
நிலுவையில் உள்ள வழக்குகள்:
இப்புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பி.டி.அரசகுமாரைக் கைது செய்தனர். பி.டி. அரசகுமார் மீது கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகப் பல்வேறு கடந்த கால வழக்குகளும் நிலுவையில் உள்ளன, கடந்த 2002-ஆம் ஆண்டு திருச்சிப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்க அரசிடம் தடையில்லா சான்று வாங்கித் தருவதாகக் கூறி 14 லட்சம் மோசடி செய்த புகாரில், 2013-ஆம் ஆண்டு புதுக்கோட்டை போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!
குண்டர் சட்டமும் பாய்ந்தது:
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலம் வாங்குவதில் இவர் மீது கடந்த காலங்களில் வழக்குகள் பதிவாகின. இவர் மீது 2017 ஆம் ஆண்டு குண்டர் சட்டமும் பாய்ந்தது. கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி சான்று உள்ளிட்ட விவகாரத்திற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது 100 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளி அங்கீகார மோசடிப் புகாரில் பிடி அரசகுமார் சிக்கியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.