மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது, அடையாள அட்டையில் மாணவர்களின் சாதி விவரம் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அது அவரது கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 27 : தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் சாதி விவரங்களை உள்ளடக்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும், முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
அடையாள அட்டையில் சாதிப் பெயர்?
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது, பள்ளிக்குச் செல்லும் மாணவக் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் உயர் கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகப் புதியதாகச் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அரசு புதிய மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்து வருகிறது என்றார். இதன் முதற்கட்டமாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!
இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் மாணவரின் தற்போதைய முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் ஆகிய முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் அட்டையில் இணைக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் எளிதாகத் தங்களின் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் மாணவரின் தற்போதைய முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் ஆகிய முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் அட்டையில் இணைக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் எளிதாகத் தங்களின் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : மதிமுக பொதுக்குழு கூட்டம்.. டிமிக்கி கொடுத்த இரு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் வைகோ-துரை வைகோ!
இந்த நிலையில் தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளத்துடன் கடிய அடையாள அட்டை வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது. மாணவர்களின் ரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூக நீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதி சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.