பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரங்களுடன் ஐடி கார்டு.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. எழுந்தது கடும் எதிர்ப்பு!
இதனிடையே, பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் குறிப்பிடப்படும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவர், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜுன் 27: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் சாதி விவரங்களை உள்ளடக்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிஞ்சு உள்ளங்களின் மனதில் சாதியப் பிரிவினையை விதைக்க அரசு முயல்வதாகப் பலரும் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தற்போதைய பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க: பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!
அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பள்ளிக்குச் செல்லும் மாணவக் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் உயர் கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகப் புதியதாகச் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அரசு புதிய மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்து வருகிறது என்றார். இதன் முதற்கட்டமாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சாதி விவரங்கள் அடங்கிய புதிய ஐடி கார்டு:
இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் மாணவரின் தற்போதைய முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் ஆகிய முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் அட்டையில் இணைக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் எளிதாகத் தங்களின் விவரங்களைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
6 மாதங்களில் முழுமையான டிஜிட்டல் சான்றிதழ்கள்:
வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முதியோர்/விதவைகள் உதவித்தொகை போன்ற சமூக நலத் திட்டப் பதிவுகள் அனைத்தும் பொதுமக்கள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களின் மொபைல் போன் மூலமாகவே தேவையான சான்றிதழ்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி இன்னும் 6 மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி:
இதனிடையே, பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் குறிப்பிடப்படும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவர், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அதன்படி, பிஞ்சு உள்ளங்கள் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில், சாதிய விவரங்களைக் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயமாகும்?
மேலும் படிக்க: தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!
மாணவர்களிடையே சாதிப் பாகுபாடுகளையும், பிரிவினைகளையும் தூண்டும் விதமாக அமையக்கூடிய இத்தகைய திட்டத்தைக் கொண்டு வருவது ஏன்? பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் மனதில் சாதி அடையாளத்தைப் புகுத்தும் இந்த விசித்திரமான நடவடிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாகப் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.