AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட் இதோ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட் இதோ..
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Jun 2026 06:24 AM IST

Tamilnadu Weather Today: தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதோடு, கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதையும் படிக்க: நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்து இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (ஜுன் 28) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

வருகிற ஜூன் 29, 2026 நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 30, 2026 முதல் ஜூலை 3, 2026 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 28, 2026 நாளை முதல் ஜூலை 1, 2026 தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us