AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!

தேர்தல் தோல்வியால் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதலே திமுகவின் கூட்டணிக்குள் சலசலப்புகள் நிலவி வந்தன. தற்போது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி வரும் வரிசையில், வைகோ தலைமையிலான மதிமுகவும் வெளியேறியிருப்பது திமுக தலைமைக்குப் பெரும் பின்னடைவாகவும், பேரதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Jun 2026 14:02 PM IST

சென்னை, ஜுன் 27: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வரும் நிலையில், மதிமுகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நிதி, மின்சாரத்தைத் தொடர்ந்து வேளாண் துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’.. தவெக அரசின் அடுத்த அதிரடி!!

பொதுக்குழுவில் அதிரடி முடிவு:

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்துக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முறைப்படி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று மதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், மிக முக்கிய முதல் தீர்மானமாக திமுக கூட்டணியில் இருந்து மதிமுக முற்றிலும் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கூட்டணி முறிவுக்கு மதிமுக கூறும் காரணங்கள் என்ன?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்த மதிமுக, உதயசூரியன் சின்னத்திலேயே களம் கண்டது. அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. எனினும், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்து ஆட்சிப் பொறுப்பை இழந்தது.

இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இதற்கான காரணங்கள் குறித்து மதிமுக விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் தங்களது கூட்டணிக்குப் போதிய அளவு வாக்குகள் அளிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தமிழக வெற்றிக்கழகம் (தவெக) புதிய ஆட்சி அமைக்கக்கூடிய அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது என்றும் மதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தேர்தல் தோல்விக்குப் பிந்தைய தற்போதைய காலகட்டத்தில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு உரிய அங்கீகாரமும், முறையான மரியாதையும் வழங்கப்படவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டையும் கட்சித் தலைமை முன்வைத்துள்ளது.

இதையும் படிக்க: திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!

திமுக முகாமிற்கு அடுத்தடுத்துப் பேரிடி:

தேர்தல் தோல்வியால் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதலே திமுகவின் கூட்டணிக்குள் சலசலப்புகள் நிலவி வந்தன. தற்போது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி வரும் வரிசையில், வைகோ தலைமையிலான மதிமுகவும் வெளியேறியிருப்பது திமுக தலைமைக்குப் பெரும் பின்னடைவாகவும், பேரதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த இந்த இரு கட்சிகளின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் தொற்றிக்கொண்டுள்ளது.

Follow Us