திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!
அதே சமயம், மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள் வரும்போது தற்போது அரசியல் களத்தில் உருவாகியுள்ள 'விஜய் எதிர் உதயநிதி' என்ற நேரடிப் போட்டிச் சமன்பாடு குலையும் என்று மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒருவேளை இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாமல் போனால், அது கட்சிக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் மு.க.ஸ்டாலினின் குடும்பத் தரப்பிலிருந்தே எச்சரிக்கை குரல்கள் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஜுன் 27: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் நேரடித் தேர்தல் களத்தில் இறக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருபுறம் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு குடும்பத் தரப்பில் இருந்து மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுவதால் திமுகவுக்குள் இருவேறு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது குட்டிகதை சொன்ன முதல்வர் விஜய், “உங்க அப்பாவை எங்க காணவில்லை” என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தரப்பில், “தலைவரைப் பார்த்துக் கேட்கிறார்கள்; அவர் சீக்கிரமாகவே வருவார், சட்டமன்றத்திற்கு வந்து மீண்டும் பொறுப்பேற்பார் என்பது உறுதி” என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
களமிறக்கத் துடிக்கும் மூத்த தலைவர்கள்:
முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பிறகு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கட்டாயம் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர். அவர் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவதே விஜய்யின் விமர்சனங்களுக்குச் சரியான பதிலடியாக இருக்கும் என்பது இவர்களின் எண்ணமாக உள்ளது.
குடும்பத்திற்குள் ஒலிக்கும் எச்சரிக்கைக் குரல்:
அதே சமயம், மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள் வரும்போது தற்போது அரசியல் களத்தில் உருவாகியுள்ள ‘விஜய் எதிர் உதயநிதி’ என்ற நேரடிப் போட்டிச் சமன்பாடு குலையும் என்று மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒருவேளை இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாமல் போனால், அது கட்சிக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் மு.க.ஸ்டாலினின் குடும்பத் தரப்பிலிருந்தே எச்சரிக்கை குரல்கள் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது.
முடிவு எடுக்காத ஸ்டாலின்:
மு.க.ஸ்டாலினை தீவிர அரசியல் களத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒருபுறமும், துணை முதல்வர் உதயநிதியை மட்டுமே முன்னிறுத்தி அரசியலை நகர்த்த வேண்டும் என்று மற்றொரு புறமும் இருவேறு கருத்துக்கள் திமுகவிற்குள் வலுத்து வருகின்றன.
இதையும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?
இதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்ட போது, “மீண்டும் களம் காண்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் இடைத்தேர்தல் வேட்பாளர் களம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் தீவிர யோசனையிலேயே நீடிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.