சென்னையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு.. காலில் குண்டு இறங்கியது.. பெரும் பரபரப்பு!
Chennai Police Fire: சென்னை நொளம்பூர் பகுதியில் கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். போலீசார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியல் சுட்டனர். இதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது.
சென்னை மாவட்டம், சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள யூனியன் சாலையை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சரத் மற்றும் சஞ்சய் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு ( ஜூன் 26) வீட்டின் அருகே சரத் மற்றும் சஞ்சய் ஆகியோர் லாரியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த உதயா திடீரென அவர்களுடன் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது, சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரை உதயா தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து உதயா தனது சகோதரர்களான கார்த்திக், ராகேஷ் உள்ளிட்ட 8 பேருடன் சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
3 பேர் மீது சரமாரியாக கத்திக்குத்து
தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற தந்தை முருகதாஸை காத்திருந்தால் தாக்கி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மூன்று பேரும் கே. எம். சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சஞ்சய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!




3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை
இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார் கொலை, கொலை முயற்சி, வீடு புகுந்து அத்துமீறி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடைபெற்றது. இதில், கொலை சம்பவத்தில் முக்கிய தொடர்புடைய ரூபேஷ் என்பவர் பதுங்கி இருக்கும் இடம் தெரியவந்தது.
போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கி சூடு
அதன் அடிப்படையில், ரூபேஷை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது, தற்காப்புக்காக அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக கே. எம். சி. மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான நவீன் குமார், சூர்யா, . உதயராஜ், ராகேஷ் ராஜா, கார்த்திக் ராஜா, சூரிய பிரகாஷ், மேஷாக் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!