AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு அரசியல் ஆலோசகரும், மு.க.ஸ்டாலினின் மருமகனுமான சபரீசன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதே ஊடகங்கள் முன்பாக சபரீசனிடம் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்  –  அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
ஆதவ் அர்ஜூனா - நிர்மல் குமார் - சபரீசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jun 2026 17:45 PM IST

சென்னை, ஜூன் 28 : அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருக்கு அரசியல் ஆலோசகரும், மு.க.ஸ்டாலினின் மருமகனுமான சபரீசன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதே ஊடகங்கள் முன்பாக சபரீசனிடம் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தன்னைப் பற்றி ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் பேசிவருவதாகவும், அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : “ஒரே மாதத்தில் தவெக-வின் போலி பிம்பம் உடைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!

இதுகுறித்து அவரது வக்கீல் நோட்டீஸில், சபரீசன் குறித்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். தன்னைக் குறித்து ஊடகங்களில் தெரிவித்த அவதூறு கருத்துகளை திரும்பப் பெறுவதுடன், அதே ஊடகங்கள் முன்பாக இருவரும் மன்னிப்புகோர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் அவதூறு கருத்துகளை வெளியிடமாட்டோம் என உறுதிமொழி அளிக்கவேண்டும் என்றும் மேலும் 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த திமுக ஆட்சியில் 32 துறைகளை முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் தலா 16 என பிரித்து வசூல் நடந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, திமுக அதிமுக சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து வேலை செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமாரும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகிய இருவரும் மன்னிப்புகோர வேண்டும் என சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் கைகளால் சொட்டு மருந்து குடித்த குழந்தை.. தமிழகமே உற்று நோக்கிய பாலவாக்கம் முகாமில் நடந்தது என்ன?

மேலும், தனது நேர்மை, பொது சேவை, உண்மையான, நேர்மையான, அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளின் மூலம் தனிப்பட்ட, சமூக, தொழில் ரீதியான வாழ்க்கை ஆகியவற்றில் களங்கமற்ற நற்பெயரை கொண்டுள்ள சபரீசனுக்கு எதிராக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஜூன் 25ஆம் தேதி நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளன என வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us