எங்களுடன் உறுதியாக நின்றவர் – ஜனநாயகன் தயாரிப்பாளர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசு பதவி வழங்கியிருப்பது சர்ச்சியானது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் , கடந்த காலங்களில் எங்கள் மீதும், எங்கள் தலைவர் மீதும் குற்றம் சுமத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், வெங்கட நாராயணா உறுதியாக நின்றவர் என்றார்.
சென்னை, ஜூன் 27 : ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசு பதவி வழங்கியிருப்பது சர்ச்சியானது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் , கடந்த காலங்களில் எங்கள் மீதும், எங்கள் தலைவர் மீதும் குற்றம் சுமத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், வெங்கட நாராயணா உறுதியாக நின்றவர். முன்பு இந்த பதவி வெறும் அலங்காரத்திற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மிகவும் நம்பிக்கையானவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்தார்.
ஜனநாயகன் தயாரிப்பாளர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இதுகுறித்து மதுரையில் ஜூன் 27, 2026 செய்தியாளர்களை சந்தித் அவர், “ தவறான நபருக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் இல்லை. ஆந்திராவை சேர்ந்தவர். கர்நாடகாவில் தொழில் தான் செய்கிறார். அவர் தமிழகத்தில் வேலை பார்க்கப் போவதில்லை. டெல்லியில் தான் இருக்கப் போகிறார் என்றார்.




இதையும் படிக்க : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
அமைச்சர் நிர்மல்குமாரின் பேட்டி
#WATCH | Madurai: On meeting with officials at the district collectorate, Tamil Nadu Minister Nirmal Kumar says, “… We held a review meeting for all departments in Madurai district. All department heads attended, and it was chaired by the District Collector, the Corporation… pic.twitter.com/hjCZsyCdGc
— ANI (@ANI) June 27, 2026
மேலும், அவர் டெல்லியில் ஒரு பிரதிநிதியாக, ஒருங்கிணைப்புக்கு இருக்கப் போகிறார். எந்தப் பெரிய முடிவுகளும் எடுக்கப் போவதில்லை, எந்த ஒப்புதலும் வழங்கப் போவதில்லை. அவர் ஒருங்கிணைப்புக்காக இருக்கப்போகிறார், அதில் நம்பிக்கையானவர்கள் இருப்பதில் தவறு இல்லை என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர். முன்பு இது அலங்கார பதவியாக மட்டுமே இருந்தது. எம்எல்ஏவாக வெற்றி பெறாதவர்களுக்கு இந்த பதவியை அளிப்பது வழக்கம். இந்த பொறுப்பை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே நம்பிக்கையானவர்.
இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?
எல்லா அழுத்தங்களையும் தாண்டி எங்கள் தலைவருடன் நிற்பவர். அவருக்கு பணமும், பொறுப்பும் ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவர் நம்பிக்கையான நபர், அதனால் இதில் தவறேதும் இல்லை. அவர் எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. எனவே அரசியலுக்காக இதை பூதாகரமாக்குவதில் தவறு ஏதும் இல்லை என்று விளக்கமளித்தார்.