AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது. மேலும், புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
மாணிக்கம் தாகூர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Jun 2026 17:58 PM IST

சென்னை, ஜூன் 27 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தவெக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதே அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சி தலைமையை அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சட்டமன்ற தேர்தலில்திமுக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

இதையும் படிக்க : மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தேர்தலுக்கு முன்பே தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்தவர் என்ற வகையில், தவெக தரப்பினருக்கும் மாணிக்கம் தாகூர் மீது நன்மதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக அரசு மீது அவ்வப்போது செல்வப்பெருந்தகை விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இந்த ​நிலை​யில், தேர்​தலுக்கு பிறகு கட்​சி​யின் மாநில தலை​வர் பதவியி​லிருந்து வில​கு​வ​தாக செல்​வப்​பெருந்தகை அறி​வித்​திருந்​தார். இந்த நிலையில் ஜூன் 26, 2026 அன்று சசெய்​தி​யாளர்​களை சந்தித்த அவர், நான் தேர்​தல் நடப்​ப​தற்கு முன்​பே, வாக்​காளர்​கள் மற்​றும் பத்​திரி​கை​யாளர் மத்​தி​யில் தேர்​தல் முடிந்​தவுடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதில் என்ன சந்​தேகம் இருக்​கிறது. பதவி வில​கு​வ​தில் 100 சதவீதம் உறு​தி​யாக இருக்​கிறேன். எல்​லோருக்​கும் ஒரு காலத்​தில் காங்​கிரஸ் மாநில தலை​வ​ராக பணி​யாற்ற வேண்​டும் என்ற ஆசை இருக்​கும். பதவி கிடைத்த பிறகு மனநிறைவோடு வில​கி​விட வேண்​டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!

மேலும் பேசிய அவர், கடந்த வாரம் காங்கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கேவை சந்​தித்​த​ு, மாநில தலை​வர் பதவியி​லிருந்து என்னை விடுவிக்​கு​மாறு கோரிக்கை வைத்​தேன். நான் பதவி விலக வேண்​டும் என்று எந்த நெருக்​கடி​யும் இல்லை. பதவியில் இருப்​பதை விட, பதவி​யில் இல்​லாத போது தான் மகிழ்ச்​சி​யாக இருப்​போம். அடுத்த மாநில தலை​வரை அகில இந்​திய தலை​மை தான்​ முடிவு செய்​யும்​ என்று தெரிவித்தார்.

Follow Us