2 எம்எல்ஏகள் ராஜினமா… வெற்றி என் பொறுப்பு… விஜய் அளித்த உத்தரவாதம் – வைகோ பரபரப்பு தகவல்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக மதிமுக விலகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, 2 உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று தெரிவித்தார்.
சென்னை, ஜூன் 27 : திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தவெக கூட்டணியில் மதிமுக இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னை சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். பாஜகவை எதிர்க்க தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் ஈபிஎஸ்ஸை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது. இந்திய முஸ்லீம் லீக், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள் நாங்கள் என்ன செய்தோம்? கேட்டார்.




இதையும் படிக்க : முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!
மேலும், 2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை என்று பேசினார்.
முதல்வர் விஜய் அளித்த உத்தரவாதம்
#WATCH | Chennai, Tamil Nadu: A high-level committee meeting of the MDMK commenced at the party headquarters in Chennai. MDMK chief Vaiko and other leaders were present in the meeting. The two-day meeting will decide the alliance stance of the party. pic.twitter.com/fQy6xkKF3C
— ANI (@ANI) June 26, 2026
மேலும், மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்யலாமே என த.வெ.க தரப்பில் பேசினர். ஆனால் நான் வாய்ப்பு இல்லை என கூறினேன். 2 உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : தமிழக பட்ஜெட் ஆலோசனை முதல் மகளிர் இலவச பயணம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்!!
தொடர்ந்து பேசிய அவர், பேசிய அவர், நான் முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். பட்டினப்பாக்கம் இல்லத்தில் 1 மணிநேரம் 20 நிமிடம் அவரிடம் பேசினேன். உங்களின் 2 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்யும் பட்சத்தி மீண்டும் தேர்தல் வரும்போது, நீங்கள் எங்கு சொல்கிறீர்களோ, அங்கு வந்து பிரசாரம் செய்கிறேன்! என்று முதலமைச்சர் சொன்னார் என்று தெரிவித்தார்.