AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை.. அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – தங்கம் தென்னரசு

இந்த நிலையில், சாதி விவரத்துடன் கூடிய அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அமைச்சரின் கருத்து பல்வேறு தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், அரசின் நிலைப்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை.. அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – தங்கம் தென்னரசு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2026 10:33 AM IST

ஜூன் 26, 2026: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருவாய்த் துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் சாதி விவரங்களை உள்ளடக்கிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

சாதி விவரத்துடன் அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையன்:

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக புதிதாகச் சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அரசு புதிய ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விளக்கியிருந்தார். முதற்கட்டமாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அடையாள அட்டையில், தற்போதைய முகவரி, சாதி விவரம், ரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் தங்களது விவரங்களை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்… தவெக இணை செயலாளர் அதிரடி நீக்கம்!

வலுக்கும் கண்டனங்கள்:

இந்த நிலையில், சாதி விவரத்துடன் கூடிய அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அமைச்சரின் கருத்து பல்வேறு தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், அரசின் நிலைப்பாடு குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – தங்கம் தென்னரசு:

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்து குறித்து தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us