முதல்வர் விஜய் கொடுத்த ஆதரவு.. ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் பிரவீன் சக்கரவர்த்தி!
Rajya Sabha MP Praveen Chakravarty : தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவையில் எம். பி. ஆக பதவி ஏற்றார். இவருடன் சேர்த்து 9 பேர் எம்பிக்களாக பதவி ஏற்றனர் .
தமிழகம், ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாநிலங்களவையில் எம்பிக்கள் இடம் காலியாக இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 1- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு ஜூன் 18- ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில், தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை எம்பி இடத்துக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வைப்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி உள்பட பல்வேறு மாநிலங்களில் எம்பியாக தேர்வான சுமார் 10 பேர் இன்று வியாழக்கிழமை ( ஜூன் 25) மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்ற 10 பேர்
இதில், தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி, ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சனா சதீஷ் பாபு, விஜய் சிண்டகயாலா, பாஷ்யம் ராமகிருஷ்ணா, ஜனசேனா கட்சியின் லிங்கமணி ரமேஷ், அருணாச்சலபிரதேசம் பாரதிய ஜனதா கட்சியின் டாய் டகக், குஜராத் ராஜேஷ் பார்மானந்த் சுக்லா, ஒடிசா டெபாஷிஷ் சமாந்தராய், சுயேட்சை வேட்பாளர் ஜார்கண்ட் பரிமால் நாத்வானி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பைதியாநாத் ராம் உள்ளிட்ட 10 எம்பிக்களாக பதவி ஏற்றனர்.
மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் பலி.. “முதல்வர் விஜய் நேரில் செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது”.. நயினார் நாகேந்திரன் சாடல்!!




தாய் மொழியில் பதவி ஏற்ற ராஜ்யசபா எம்பிக்கள்
இவர்களில் 5 உறுப்பினர்கள் தாய்மொழியான ஹிந்தியிலும், ஒருவர் ஆங்கிலத்திலும், ஒருவர் தமிழிலும், மூன்று பேர் தெலுங்கிலும் பதவி ஏற்றனர். தமிழகத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒருவர் எம்பி யாக தேர்வு செய்யப்படுவோர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமை கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், எம்பி இடம் அந்த கட்சிக்கு வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான பிரவீண் சக்கரவர்த்திக்கு எம்பி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
போட்டி இன்றி எம்பி- ஆக தேர்வு செய்யப்பட்ட பிரவீன் சக்கரவர்த்தி
அதன்படி, இவருடன் சேர்த்து சுமார் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் 14 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனு மற்றும் ஏற்கப்பட்டு, அவர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!