AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. கன்னியாகுமரியில் டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் உயிரை மாய்த்த இளம் பெண்!

Kanyakumari Crime : கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளம் பெண் ஒருவர் டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தன்னை தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. கன்னியாகுமரியில் டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் உயிரை மாய்த்த இளம் பெண்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Jun 2026 15:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு சிவா நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கு 24 வயதில் காவியா என்ற மகள் இருந்தார். எம். எஸ். சி. படித்து முடித்துள்ள இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்த நிலையில், காவியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், காவியா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், பால்பாண்டி தனது வேலைக்கு பயன்படுத்தும் எலக்ட்ரிக் இயந்திரமான டைல்ஸ் அறுக்கும் மெஷினை தனது வீட்டில் வைத்திருந்தார். அப்போது, மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் காவியா திடீரென தற்கொலை செய்ய முடிவை எடுத்துள்ளார். அதன்படி, டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தை ஆன் செய்து அதனை தனது கழுத்தில் காவியா வைத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்

அப்போது, அந்த இயந்திரம் அறுத்ததில் கழுத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சத்தம் போட்டார். இதனால், வீடு முழுவதும் ரத்தம் சிதறி காணப்பட்டது. இதனிடையே, காவியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு, அவரது நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. தகுதியானவர்கள் யார் யார்?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!!

கொடூரமான முறையில் தற்கொலை செய்த பெண்

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், காவியாவின் கழுத்து பலமாக வெட்டப்பட்டிருந்தது. அத்துடன், அதிகளவிலான ரத்தமும் வெளியேறி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவியாவின் தந்தை பால்பாண்டி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா

மேலும், அவரது வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காவியா தீராத தலைவலியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், காவியாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு

சுசீந்திரம் பகுதியில் டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் இளம்பெண் தன்னை தானே கழுத்தில் அறுத்துக் கொண்டு கொடூரமாக தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த கிராம பகுதிகளில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னை தி.நகரில் நடந்த இரட்டை கொலை சம்பவங்கள்.. குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை..

Follow Us