AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. போக்குவரத்தை மீறினால் அவ்வளவுதான்.. களமிறங்குகிறது ஏஐ தொழில்நுட்பம்!

Chennai City AI Cameras : சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வாயிலாக தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. போக்குவரத்தை மீறினால் அவ்வளவுதான்.. களமிறங்குகிறது ஏஐ தொழில்நுட்பம்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 Jun 2026 17:01 PM IST

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். இதனால், தேவையில்லாத விபத்துக்கள், உயிர் இழப்புகள் உள்ளிட்டவை நிகழ்கின்றன. அதேபோல, சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களால் ஏராளமான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகரில் செயற்கை நுண்ணறிவு ( ஏ ஐ) தொழில்நுட்ப உதவியுடன் சாலை விதிமீறலுக்கு தானியங்கி வாயிலாக அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை மாநகரில் ஜப்பான் நிதி உதவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இன்டலிஜென்ட் ட்ரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஐடிஎம் திட்டத்தில் 70 சதவீதம் பணிகள் நிறைவு

சென்னை மாநகரில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பணிகளில் தற்போது வரை சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 6 மாதங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்டலிஜென்ட் ட்ரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் திட்டத்துக்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக சென்னை மாநகர சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் நபர்கள்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலினை ஏளனமாக விமர்சித்தது முதல்வர் பதவிக்கு அழகல்ல.. திருமாவளவன் கண்டிப்பு!

போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்

சிக்னல் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் என போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ( ஏ ஐ) தொழில்நுட்பத்தின் உதவியோடு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள்.

ஏஐ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

சாலைகளில் எதிர் திசையில் செல்வது, இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வது, சிக்னல்களில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி செல்வது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, சென்னையில் தானியங்கி சிக்னல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!

Follow Us