அரசு கடன் வாங்குவதில் தவறில்லை, தமிழகத்துக்கு நிதி நிலுவை இல்லை… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
காஞ்சி பல்கலைகழகத்தில் ஜூன் 24, 2026 இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை. அரசு கடன் வாங்குவதில் தவறில்லை. என்று பேசினார்.
சென்னை, ஜூன் 25 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக சென்னை வந்தடைந்தார். சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் காஞ்சி பல்கலைக்கழகத்தில் ஜூன் 25, 2026 இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றார். மேலும் அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
காஞ்சி பல்கலைகழகத்தில் ஜூன் 24, 2026 இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை. அரசு கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அடிப்படை கட்டமைப்புக்கு செலவிட வேண்டும். கடன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலுக்கான முதலீடுகளை செய்ய வேண்டும். வெறுமனே நலத் திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல என்றார்.




இதையும் படிக்க : “தயவுசெய்து அறிவிங்க தலைவரே”.. இனிமேல் யாரோடும் கூட்டணி வேண்டாம்.. மு.க.ஸ்டாலின் முன் ஆ.ராசா வைத்த கோரிக்கை!!
நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்
Programme details of Smt @nsitharaman‘s visit to Tamil Nadu & Puducherry on 25th & 26th June, 2026. pic.twitter.com/tB4XDND4Cy
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) June 24, 2026
மேலும் பேசிய அவர், அரசியல் விமர்சனங்களை சட்டமன்றத்தில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும், எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும் ஆளும் கட்சியும் பேசட்டும் அதில் தவறு ஒன்றும் இல்லையே. மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படும் என்று கூறி இருக்கின்றனர். அது மிகவும் வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சியின் போதும் கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி முறையாக கொடுக்கப்பட்டது என்றார்.
இதையும் படிக்க : மகளிர் உரிமைத்தொகை.. தமிழகத்தை நான் தான் ஆண்டு கொண்டிருக்கிறேன் – முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின்..
முன்னதாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 5 ஆண்டில் ரூ. 4.87 லட்சம் கோடி புதிய கடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் கடன் சுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக உள்ளது. மாநில மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.