ரூ.1.5 லட்சம் கோடி எங்கே போனது? இவ்வளவு குளறுபடியா? மின்சாரத்துறையில் வெளியான ஷாக்கிங் வெள்ளை அறிக்கை!
2000-ஆம் ஆண்டிற்கு முன்னதாக வெறும் ₹6,492 கோடியாக மட்டுமே இருந்த மின்சார வாரியத்தின் மொத்தக் கடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2001 - 2006: இந்த ஐந்து ஆண்டுகாலப் பகுதியில் மின்சார வாரியத்திற்காக வாங்கப்பட்ட மொத்தக் கடன் ₹28,231 கோடியாகும்.
சென்னை, ஜுன் 25: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த 25 ஆண்டுகால நிதிநிலை மற்றும் கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையைத் தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மின்சார வாரியத்தின் வருவாய், செலவினங்கள் மற்றும் கட்டண உயர்வால் பொதுமக்கள் எதிர்கொண்ட சுமைகள் குறித்த புள்ளிவிவரங்கள் ஆதாரங்களை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கினார்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
கடந்த 25 ஆண்டுகால நிதிநிலை ஒப்பிடு:
மின்சார வாரியத்தின் கடந்த கால நிதிப் பற்றாக்குறை மற்றும் வருவாய் குறித்த ஒப்பீட்டுப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, 2001 – 2006 (அதிமுக ஆட்சி): மொத்த வருவாய் ₹59,000 கோடி; செலவினங்கள் ₹67,000 கோடி. நிதிப் பற்றாக்குறை (கேப்) ₹8,355 கோடியாக இருந்தது. 2006 – 2011 (திமுக ஆட்சி): மொத்த வருவாய் ₹92,734 கோடி; செலவினங்கள் ₹1,28,000 கோடியாக உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ₹56,000 கோடியாக அதிகரித்தது. 2021 – 2026 (கடந்த திமுக ஆட்சி): மொத்த வருவாய் கணிசமாக உயர்ந்து ₹4,97,000 கோடி மின்சார வாரியத்திற்கு வந்துள்ளது. ஆனால், செலவினங்களும் மிகக் கடுமையாக உயர்ந்து ₹5,32,443 கோடி ஆகியுள்ளது. நிதிப் பற்றாக்குறை ₹34,000 கோடியாக உள்ளது
கடந்த 25 ஆண்டுகால கடன் சுமை ஒப்பீடு:
2000-ஆம் ஆண்டிற்கு முன்னதாக வெறும் ₹6,492 கோடியாக மட்டுமே இருந்த மின்சார வாரியத்தின் மொத்தக் கடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2001 – 2006: இந்த ஐந்து ஆண்டுகாலப் பகுதியில் மின்சார வாரியத்திற்காக வாங்கப்பட்ட மொத்தக் கடன் ₹28,231 கோடியாகும். 2021 – 2026 (கடந்த திமுக ஆட்சி): முந்தைய ஆட்சிகளை எல்லாம் விட மிகக் கொடூரமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே மின்சார வாரியத்திற்காகப் புதிதாக ₹87,399 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வும் ₹51,000 கோடி கூடுதல் செலவும்:
கடந்த திமுக ஆட்சியில் (2022-ஆம் ஆண்டு) கொண்டு வரப்பட்ட மின் கட்டண உயர்வால் மின்சார வாரியத்தின் வருவாய் ₹57,625 கோடியிலிருந்து ₹65,447 கோடியாக, அதாவது 100% க்கும் மேலாகப் புதிதாக வருவாய் அதிகரித்தது. “மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது, கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகக் கடந்த அரசு கூறியது. கட்டண உயர்வின் மூலம் ₹65,447 கோடி புதிய வருவாய் வந்தபோதிலும், அதற்கு இணையாக வாரியத்தின் செலவினங்களும் ₹51,831 கோடி அளவிற்கு மர்மமான முறையில் அதிகரித்துள்ளது” என வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!
இமாலய நிதி புழங்கிய மின்சார வாரியம்:
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி என்பது மின்சார வாரியத்திற்கு அடிஷனல் மின்கட்டண உயர்வு மூலம் ₹67,000 கோடி கூடுதல் வருவாய் (Revenue) உள்ளே வந்த காலமாகும். ஒருபக்கம் ₹67,000 கோடி கூடுதல் வருவாய், மறுபக்கம் ₹87,399 கோடி புதிய கடன் என இமாலய நிதி மின்சார வாரியத்திற்குள் புழங்கியுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாகப் பணத்தைக் கொட்டிய பிறகும், மின்சார வாரியத்தின் செலவினங்கள் மட்டுமே அதிகரித்துள்ளதே தவிர, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.