AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் கைகளால் சொட்டு மருந்து குடித்த குழந்தை.. தமிழகமே உற்று நோக்கிய பாலவாக்கம் முகாமில் நடந்தது என்ன?

இதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலம் முழுவதும் மொத்தம் 43,051 மையங்கள் தங்கு தடையின்றிச் செயல்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் கைகளால் சொட்டு மருந்து குடித்த குழந்தை.. தமிழகமே உற்று நோக்கிய பாலவாக்கம் முகாமில் நடந்தது என்ன?
போலியோ சொட்டு மருந்து கொடுத்த முதல்வர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Jun 2026 10:16 AM IST

சென்னை, ஜுன் 28: போலியோ நோய் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை அந்ததந்த மாவட்ட அமைச்சர்கள் தங்களது தொகுதியில் தொடங்கி வைத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்:

அந்தவகையில், சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், தமிழக முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை முறைப்படி தொடங்கி வைத்தார். குழந்தைக்குத் தனது கைகளால் போலியோ சொட்டு மருந்தை ஊட்டி, இம்மாபெரும் மக்கள் நல்வாழ்வுப் பணியை அவர் முன்னெடுத்து வைத்தார்.

52 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு:

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலம் முழுவதும் மொத்தம் 43,051 மையங்கள் தங்கு தடையின்றிச் செயல்பட்டு வருகின்றன.

மலைக்கிராமங்களுக்கும் சிறப்பு வசதி:

தொலைதூரப் பகுதிகள், எளிதில் சென்றடைய முடியாத மலைப் பிரதேசங்கள் மற்றும் குக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?

இன்று ஏதேனும் ஒரு காரணத்தினால் முகாமிற்கு வர இயலாத மற்றும் விடுபட்டுப் போகும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சொட்டு மருந்து வழங்குவதற்காக நாளையும் (திங்கட்கிழமை) இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடைபெறும் என்று பொதுச் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் தங்களின் கடமையாக இந்தச் சொட்டு மருந்தை வழங்கிப் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Follow Us