ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? சவால் விடுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 27 : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை வெளியிட்டால் அரசியலை விட்டு விலக தயார். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? சவால் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் ஜூன் 27, 2026 இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்டுடியோ ஆட்சியை தவெக நடத்தி வருகிறது என்றார்.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்
மேலும் பேசிய அவர், சிங்கப்பெண் படை அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குழந்தைக்கு மருந்து பொடித்துக் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அவரது அருகில் குழந்தையே இல்லை. சட்டமன்ற தலைவரின் சில கருத்துகள், நடவடிக்கைகளை வரவேற்கிறேன். ஆனால் ஆதாரமற்ற கருத்துகளை முதல்வர் பேசுவதை சட்டமன்ற தலைவர் அனுமதிக்க கூடாது என்றார்.




இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?
தொடர்ந்து பேசிய அவர், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். அவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் நண்பர். தமிழக அரசின் திட்டங்களையும் தேவையான நிதியையும் பெற்று தர வேண்டிய இடத்தில் உள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒருவரை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது என்றார்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
Thoothukudi, TN | On the Tamil Nadu government’s Special Representative at New Delhi, BJP TN State President Nainar Nagendran says, “… Appointing Venkat Narayana, who hails from Karnataka, as the Tamil Nadu government’s Delhi Special Representative is unjustified and a ‘great… pic.twitter.com/VujL2zfwf5
— ANI (@ANI) June 26, 2026
மேலும், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கணக்கு சரியாக வராது. பாஜக வாக்கு வங்கி சரிந்துவிட்டதாக சொல்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலைவிட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இந்தக் கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மேலும், நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படும் கடிதம் செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடட்டும். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? என்றார். மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதி பெயரை குறிப்பிடுவது கண்டனத்திற்குரியது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையைகூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை” என்று அவர் தெரிவித்தார்.