AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஒரே மாதத்தில் தவெக-வின் போலி பிம்பம் உடைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே தமிழகத்தில் குதிரை பேரங்களும், பல்வேறு முறைகேடுகளும் தங்கு தடையின்றி அரங்கேறத் தொடங்கிவிட்டன. தவெக அரசுக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கும் நோக்குடன் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாக சாடினார்.

“ஒரே மாதத்தில் தவெக-வின் போலி பிம்பம் உடைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Jun 2026 12:45 PM IST

தஞ்சாவூர், ஜுன் 28: “தூய ஆட்சி என்று கூறிக்கொண்டு வெற்று விளம்பரங்களுடன் வந்த தவெக அரசின் போலி பிம்பம், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள்ளாகவே மக்கள் மத்தியில் முற்றிலும் உடைந்து நொறுங்கிவிட்டது” என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். இந்த மேடையை முழுமையான அரசியல் தளமாகப் பயன்படுத்திய அவர், தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் தோலுரித்துக் காட்டினார்.

இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?

ஜனநாயகம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது:

திருமண விழாவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே தமிழகத்தில் குதிரை பேரங்களும், பல்வேறு முறைகேடுகளும் தங்கு தடையின்றி அரங்கேறத் தொடங்கிவிட்டன. தவெக அரசுக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கும் நோக்குடன் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி, தமிழக சட்டமன்றத்தின் கண்ணியமும், பாரம்பரிய ஒழுங்கும் தற்போதைய த.வெ.க ஆட்சியில் முற்றிலும் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. மக்கள் நலனை விடத் தங்களின் சுய விளம்பரங்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் அவதி:

தொடர்ந்து பேசிய அவர், டெல்டா பகுதியின் தற்போதைய அவல நிலை குறித்தும் சுட்டிக்காட்டினார். “டெல்டா மாவட்டங்களில் போதிய தடையற்ற மின்சாரம் வழங்கப்படாததால், பல கிராமங்களில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நமது நெல் விளைவிக்கும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி, வேதனையில் இருக்கிறார்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாம் (திமுக) ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் நலனுக்கும், தடையற்ற மின்சாரத்திற்கும் முன்னுரிமை கொடுத்துப் பாதுகாத்தோம். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: ஆதாரம் இருந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

கடும் அரசியல் விவாதம்:

“கடந்த ஒரு மாத கால ஆட்சி மாற்றத்திலேயே மக்கள் தவெக அரசின் உண்மை முகத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டனர்” என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Follow Us