காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை? தமிழக அரசியலைக் உலுக்கும் அதிரடித் திருப்பம்!
தொடக்கத்திலிருந்தே தவெக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மாணிக்கம் தாகூரை டெல்லி தலைமை புதிய தலைவராக்கியதன் மூலம், செல்வப்பெருந்தகை கடைப்பிடித்து வந்த 'திமுக இணக்க அரசியல்' தமிழக காங்கிரஸில் முடிவுக்கு வந்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலைத் தவெக கூட்டணியோடு வலுவாக எதிர்கொள்ளவே செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை, ஜுன் 28: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை அதிரடியாக விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். “தன்னை பதவியிலிருந்து விடுவிக்குமாறு செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், அவர் தீவிர திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததே இந்த பதவிப் பறிப்பிற்கு முதன்மைக் காரணம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதையும் படிக்க: “அடுத்த டார்கெட் இதுதான்!” – பதவி ஏற்றதும் ராகுல், விஜய் பற்றி மாணிக்கம் தாகூர் சொன்ன ரகசியம்!
திமுக ஆதரவுப் போக்கும் கட்சிக்குள் எழுந்த கலகமும்:
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்தபோது, செல்வப்பெருந்தகை திமுக தலைமையுடன் மிகவும் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால், இவரது இந்த அணுகுமுறை தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
“செல்வப்பெருந்தகையின் மென்மையான போக்கால், தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சியை திமுக முற்றிலுமாக முடக்குகிறது; காங்கிரஸ் தலைவர்களை மதிக்க மறுக்கிறது” என்று மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்பிக்கள் டெல்லி தலைமையிடம் செல்வப்பெருந்தகைக்கு எதிராகத் தொடர் புகார்களை அடுக்கினர். மாநிலப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கரும் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து ராகுல் காந்தியிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்த உள்கட்சி மோதல்களின் உச்சகட்டமாகவே தற்போது செல்வப்பெருந்தகை ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
தவெக வருகையும் செல்வப்பெருந்தகையின் வீழ்ச்சியும்:
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் வழங்கியது. இதன் மூலம் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சரவை பொறுப்புகளும், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடமும் கிடைத்தன.
தொடக்கத்திலிருந்தே தவெக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மாணிக்கம் தாகூரை டெல்லி தலைமை புதிய தலைவராக்கியதன் மூலம், செல்வப்பெருந்தகை கடைப்பிடித்து வந்த ‘திமுக இணக்க அரசியல்’ தமிழக காங்கிரஸில் முடிவுக்கு வந்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலைத் தவெக கூட்டணியோடு வலுவாக எதிர்கொள்ளவே செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை?
தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவர் காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணையப் போகிறாரா என்ற ஊகங்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து அவரிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?
காங்கிரஸ் தலைமை விடுத்துள்ள அறிவிப்பில், “கட்சி புதிய பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளதால், செல்வப்பெருந்தகை இல்லாத புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கித் தமிழக காங்கிரஸ் நகர்வது தெளிவாகத் தெரிகிறது.