Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு

Monsoon Safety Warning: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் மின் விபத்துக்களை தடுக்க, செய்ய வேண்டியது குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Oct 2025 18:09 PM IST

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து  அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட நிலையில்,  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு முக்கியமான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்க அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமென மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் கீழே விழுந்த மின்கம்பிகள், மின் கம்பங்கள், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றிற்கு அருகே செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் ஈரமான கையுடன் மின்சார ஸ்விட்சுகள், மின்விசிறிகள், விளக்குகள் போன்றவற்றை இயக்க வேண்டாம். வீட்டின் சுவர்கள் உள் மற்றும் வெளி பக்கங்களில் ஈரமாக இருந்தால், அந்த நேரத்தில் ஸ்விட்சுகளை தொடக்கூடாது. ஈரமான கம்பிகள், கருவிகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்.. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

தண்ணீர் நிறைந்த இடங்களில் கவனம் தேவை

சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தால் கவனமாக இருப்பது அவசியம். மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கும்போது குறிப்பாக மின் கம்பங்க் அருகே நடப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு, மின்சார கோளாறு அல்லது விபத்துகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்தின் அவசர உதவி எண்ணான94987 94987 எனும் எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மின்சார அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க : மழைக் காலத்தில் குழந்தைக்கு இருமல் தொல்லையா..? உடனடியாக போக்கும் எளிய வழிகள்!

மழை காலங்களில் சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நிகழ்கின்றன. இதனை தவிர்க்க மின்சார வாரியம் மேற்குறிப்பிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது மழை காலங்களில் மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக வீடுகளில் மின்சாதனங்களை பயன்படுத்தும்போதும், சாலைகளில் நடக்கும்போதும் மிக கவனமாக நடப்பது மிகவும் அவசியம்.