AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயற்கையின் மடியில் இதமான பயணம்: உத்தராகண்டில் மனதை வருடும் அமைதி!

The Essence of Slow Living: பெருநகரங்களின் மாசு மற்றும் நெரிசலான இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கும் தம்பதியினரும் குடும்பங்களும், உத்தராகண்டின் குமாவோன் மலைப்பகுதியில் உள்ள பவளீ போன்ற அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நோக்கி தங்களது பயணங்களைத் தொடங்கி வருகின்றனர்.

இயற்கையின் மடியில் இதமான பயணம்: உத்தராகண்டில் மனதை வருடும் அமைதி!
உத்தராகண்ட் சுற்றுலாImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 May 2026 16:01 PM IST

இன்றைய அவசர உலகத்தில், குறிப்பாக இந்தியாவின் பெருநகரங்களில் வாழும் தம்பதியினரும் குடும்பங்களும் தங்களின் நெரிசல்மிக்க இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் மலைப்பகுதிகளையும், அமைதியான சிறிய நகரங்களையும் நோக்கி தங்களது பயணங்களைத் தொடங்கி வருகின்றனர். தில்லிய போன்ற பெருநகரங்களில் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் கடிகார முட்களோடு போட்டிப்போட்டுக் கொண்டு ஓடும் மக்கள், உத்தராகண்டின் குமாவோன் மலைப்பகுதியில் தங்களது பொன்னான நேரத்தை செலவிட விரும்புகின்றனர். சிலர் தங்களின் பெருநகர வாழ்க்கையை முழுமையாகத் துறந்துவிட்டு, இந்த அமைதியான மலைப்பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேறவும் செய்கின்றனர். அங்குள்ள பைன் மரக் காடுகளும், தூய்மையான காற்றும், பறவைகளின் கீதங்களும் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்க்கையை நிதானமாக வாழக் கற்றுக்கொடுக்கிறது.

பவளீ மற்றும் நைனிடால் பகுதியின் இயற்கை எழில்

உத்தராகண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான நைனிடால், பீம்தால் மற்றும் சாத்தாலுக்கு மிக அருகில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் பவளீ (Bhowali) எனும் அமைதியான பகுதி அமைந்துள்ளது. பரபரப்பான நைனிடால் ஏரிக்கரை விடுதிகளுடன் ஒப்பிடும்போது, பவளீ பகுதி இன்னும் வணிகமயமாக்கப்படாமல் அதன் பழமையான இயற்கை அழகோடு காணப்படுகிறது. புராணங்களின்படி, நைனிடால் ஏரியானது ‘திரி-ரிஷி-சரோவர்’ என்று அழைக்கப்படுகிறது. மூன்று முனிவர்கள் தங்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக திபெத்தின் மானசரோவரில் இருந்து நீரை வரவழைத்து இந்த ஏரியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தேவி சதீயின் கண் விழுந்த 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று என்ற ஆன்மீக நம்பிக்கையும் நிலவுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோடைகாலத் தலைநகராக விளங்கிய இப்பகுதியில், இன்றும் பழமையான பள்ளிகள் மற்றும் தேவாலயங்களின் வரலாற்றுச் சுவடுகளைக் காண முடிகிறது.

பிரிஜ் ஆத்மன்யா விடுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பவளீ மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘பிரிஜ் ஆத்மன்யா’ (Brij Atmanya) என்ற பிரத்யேக தங்குமிடம், இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியலை வழங்குகிறது. இந்த விடுதியைக் கட்டும்போது அங்குள்ள ஒரு மரத்தைக் கூட வெட்டாமல், மரங்களைச் சுற்றியே அதன் அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கற்கள் மற்றும் பைன் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்களுக்கு, ரொடோடென்ட்ரான் மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய ‘புரான்ஷ்’ (Buransh) சாறு வழங்கி வரவேற்கப்படுகிறது. இங்கு செயற்கை குளிர்பானங்களுக்குப் பதிலாக அம்லா மற்றும் ஆம் பன்னா போன்ற இயற்கை பானங்களே வழங்கப்படுகின்றன. மேலும், மாலையில் கடலை மாவு, மஞ்சள், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைத் தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை உவ்டன் (Ubtan) போன்ற சருமப் பராமரிப்பு முறைகளும் இங்கு வழங்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

பாரம்பரிய குமாவோனி உணவு மற்றும் பொழுதுபோக்குகள்

இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் ‘குமாவோனி தாலி’ (Kumaoni Thali) எனப்படும் பாரம்பரிய உணவு, அந்த பிராந்தியத்தின் புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது. உள்ளூர் பண்ணைகளில் விளைவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, ராகி ரொட்டி, சிவப்பு அரிசி கீர் மற்றும் சணல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ‘பாங் கி சட்னி’ போன்ற ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. பொழுதுபோக்கிற்காக, காடுகளில் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களைக் கண்டறியும் பறவைகள் கண்காணிப்புப் பயணம் மற்றும் மலைகளின் நடுவே அமர்ந்து பைன் கூம்புகளுக்கு (Pine Cone) வண்ணம் தீட்டும் கலைப் பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இரவு நேரங்களில் திறந்தவெளியில் நெருப்பு மூட்டி (Bonfire), குளிர் காற்றுக்கு நடுவே திரைப்படங்களைப் பார்த்து மகிழும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

Follow Us