இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் எப்படி பணம் அனுப்புவது? இதோ எளிய வழி!
இண்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் குறிப்பாக கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், இணைய சேவை பாதிக்கப்பட்ட இடங்கள் ஆகிய இடங்களில் பணம் அனுப்ப இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. இந்த கட்டுரையில் அந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் யுபிஐ மிக முக்கிய இடத்தை பிடித்தள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆகிய செயலிகள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. தங்கம், கார் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவது வரை நம் பணத்தை கையாளும் முறையை மிக எளிமையாக மாற்றியிருக்கிறது. ஆனால் யுபிஐ சேவைகளை பொறுத்தவரை பலரும் எதிர்கொள்ளும் இண்டர்நெட் சேவை இல்லாமல் இருக்கும்போதோ, அல்லது நெட்வொர்க் பிரச்னை இல்லாமல் இருக்கும் போதோ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்திக்கின்றனர். அந்த நேரங்களில் இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதியை தேசிய கொடுப்பனவு கழகம் வழங்குகிறது. அது எப்படி மேற்கொள்வது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்ப என்ன தேவை?
இண்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் குறிப்பாக கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், இணைய சேவை பாதிக்கப்பட்ட இடங்கள் ஆகிய இடங்களில் பணம் அனுப்ப இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது.




இணையம் இல்லாமல் யுபிஐ சேவையை பயன்படுத்துவதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களில் முக்கிய உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- உங்கள் மொபைல் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- யுபிஐ சேவையை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
- இணைய சேவை இல்லையென்றாலும் மொபைல் நெட்வொர்க்கில் சிக்கனல் இருக்க வேண்டும்.
- எஸ்எம்எஸ் மற்றும் கால் வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க : யுபிஐயில் பேமெண்ட் ஃபெயில் என வந்தும் பணம் எடுக்கப்பட்டதா? எப்படி திரும்ப பெறுவது?
தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு
Digital payments shouldn’t depend on internet availability.
With UPI 123PAY, feature phone users can make UPI transactions without internet, helping digital payments reach more people across the country.
[UPI Chalega, UPI 123PAY, Feature Phones, Pay without internet, Financial… pic.twitter.com/CwqscUiJFV
— UPI (@UPI_NPCI) March 20, 2026
இணைய வசதி இல்லாமல் எப்படி பணம் அனுப்புவது?
Step 1 : உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் உள்ள போனில் இருந்து *99# என டயல் செய்ய வேண்டும்.இந்த சேவை இந்தியாவின் பெரும்பாலான வங்கிகளில் கிடைக்கிறது. அப்போது யுபிஐ சேவை தொடர்பான ஆப்சன்கள் உங்கள் ஸ்கிரீனில் காட்டப்படும்.
Step 2 : உங்கள் மொபைல் ஸ்கிரீனில்
- Send Money
- Request Money
- Check Balance
- My Profile
போன்ற ஆப்சன்கள் தோன்றும். அதில் Send Money என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
Step 3 : நீங்கள் பணம் அனுப்ப யுபிஐ ஐடி, மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோட் போன்ற ஆப்சன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
Step 4: நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய நபரின மொபைல் எண், யுபிஐ ஐடி அல்லது வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். பின்னர் அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும்.
Step 5 : யுபிஐ பின் குறிப்பிட்டு நம் பண்பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும். அந்த பிராசசஸ் முடிந்ததும் நம் பணம் அனுப்பபப்படும். நம் பணம் அனுப்பப்படும் உறுதி செய்யும் வகையில் மெசேஜ் ஸ்கிரீனில் காட்டப்படும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.
இதையும் படிக்க : இந்த ஆண்டு பிஎஃப் வட்டி தாமதமாக வரவு வைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!
கவனிக்க வேண்டியவை
- சில டெலிகாம் நிறுவனங்கள் இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கலாம்.
- வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
- தவறான விவரங்களை குறிப்பிட்டால் பணம் வேறு கணக்குக்கு செல்ல வாய்ப்புள்ளது.
- யுபிஐ விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது அவசியம்.
FAQ
1. இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ பயன்படுத்த முடியுமா?
இந்திய சேதிய கொடுப்பனவு கழகத்தின் *99# என்ற சேவையின் மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்பப முடியும்.
2. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்ப என்ன தேவை?
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், செயல்பாட்டில் உள்ள யுபிஐ சேவை மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆகியவை முக்கியமாக தேவை.
3. இந்த சேவை அனைத்து வங்கிகளிலும் செயல்படுமா?
இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் இணைய வசதி இல்லாமல் பணம் அனுப்பும் சேவையை வழங்குகின்றன.