AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி.. ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா!! நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!!

ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதை தினசரி நிலவரங்கள் காட்டுகின்றன. அதன்படி, ஜூன் 2 & 3ம் தேதிகளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,16,000ஆக இருந்தது. தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி 1,15,840க்கு விற்கப்பட்டது. அதாவது, ரூ.160 குறைவானது.

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி.. ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா!! நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Jun 2026 10:41 AM IST

Gold Price Today: சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, நடப்பு ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்த நிலையில், இன்றைய தினம் (ஜூன் 6) யாரும் எதிர்பாராத விதமாக ஒரே நாளில் சவரனுக்கு மேலும் ரூ.1,840 அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் லேட்டஸ்ட் ரெப்போ விவரம்!

இன்றைய தங்கம் விலை:

அந்தவகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,840 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.11,910-க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.95,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, நேற்று (ஜூன் 5) சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் சரிவடைந்துள்ளது.

இன்றைய வெள்ளி விலை:

அந்தவகையில், இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், கிலோவுக்கு ரூ.10,000 சரிந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது. (நேற்று கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை போக்கு:

ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதை தினசரி நிலவரங்கள் காட்டுகின்றன. அதன்படி, ஜூன் 2 & 3ம் தேதிகளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,16,000ஆக இருந்தது. தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி 1,15,840க்கு விற்கப்பட்டது. அதாவது, ரூ.160 குறைவானது. பின், ஜூன் 5ம் தேதி 1,15,440க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சவரனுக்கு ரூ.400 குறைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 6 ரூ.1,13,600க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூன் 2-ம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடும்போது, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 வரை சரிவடைந்துள்ளது.

இதையும் படிங்க: பே ஸ்லிப் இல்லை என்றால் கிரெடிட் கார்டு கிடைக்காதா?.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

தங்கம் விலை குறைய காரணம்:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், உலகளாவிய காரணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் புதிய போக்குகளே இந்தத் தொடர் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி விலை வீழ்ச்சி, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Follow Us