நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் 400 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன ?
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,430க்கும், ஒரு சவரன் ரூ.1,15,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,742க்கும், ஒரு சவரன் ரூ.1,25,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து தற்போது ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் 5, 2026: ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த சூழலில், ஜூன் 4ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,480 ஆக இருந்தது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதி மீண்டும் தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 வரை குறைந்துள்ளது.
தொடர்ந்து விலை குறையும் தங்கம்:
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,430க்கும், ஒரு சவரன் ரூ.1,15,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,742க்கும், ஒரு சவரன் ரூ.1,25,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து தற்போது ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,80,000 ஆக உள்ளது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் குறைந்திருப்பது நுகர்வோருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றங்கள் போன்றவை தங்கம் விலையை நேரடியாக பாதித்து வருகின்றன. குறிப்பாக, போர் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் மற்றும் சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் முதலீட்டாளர்களின் கவனத்தை வேறு துறைகளுக்கு திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீடு தற்காலிகமாக குறைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் லேட்டஸ்ட் ரெப்போ விவரம்!
அதே சமயம், வரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலையில் மேலும் சிறிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், திருமண நகைகள் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் நகை முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் தங்க நகைகள் வாங்கி வருகின்றனர்.