AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா… 17 ஆண்டுகளைக் கடந்தது நகுல் – சுனைனாவின் மாசிலாமணி படம்

17 Years Of Masilaamani Movie | தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாசிலாமணி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது. இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா… 17 ஆண்டுகளைக் கடந்தது நகுல் – சுனைனாவின் மாசிலாமணி படம்
மாசிலாமணி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2026 16:07 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாசிலாமணி. ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.என்.ஆர் மனோகர் எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் நகுல் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பவன்,
சங்கீதா, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், தாதினேனி ராஜேஸ்வரி, சந்தானம், ஸ்ரீநாத், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ், சந்தான பாரதி, மனோபாலா, ராஜ் கபூர், டி.கே.கலா, ராஜேந்திரநாத், கேவிஎம் கண்ணன், தாரிணி, ஹரிணி, அழகு, கிருஷ்ணா, மஹிமா, வி.மகாதேவன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளைக் கடந்தது நகுல் – சுனைனாவின் மாசிலாமணி படம்:

இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வலம் வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நகுல் மற்றும் சுனைனாவின் நடிப்பும் ரசிகர்களிடையே அதிக அளவில் பாரட்டப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகை 17 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு பதிவு ஒன்றை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்? அட இதுதான்!

மாசிலாமணி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Samantha: எங்கள் தங்கம் பட ரிலீஸ்.. கணவருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா!

Follow Us