Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!

Best Speakers Introduced In 2025 | 2025-ல் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், 2025-ல் நிறுவனங்கள் அறிமுகம் செய்த பல ஸ்மார்ட்போன்கள் அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!
ஸ்பீக்கர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Dec 2025 23:42 PM IST

இசை என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. சோகம், மகிழ்ச்சி, துக்கம் என எதுவாக இருந்தாலும் ஒரு பாடல் அல்லது இசை அவற்றை மறக்க செய்து ஆறுதல் அளிக்கும். இதன் காரணமாக பெரும்பாலான நபர்கள் தனிமையில் இருக்கும்போது, பயணம் செய்யும்போதும், சுற்றுலா செல்லும்போதும் இசை கேட்க விரும்புவர். இதற்காக பலரும் ஸ்பீக்கர்களை (Speaker) எடுத்துச் செல்வர். உள்ளே (Indoor) மற்றும் வெளியே (Outdoor) வைத்து பயன்படுத்தக்கூடிய அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்பீக்கர்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட சில அட்டகாசமான ஸ்பீக்கர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் அறிமுகமான அட்டகாசமான ஸ்பீக்கர்கள்

ஜேபிஎல் (JBL), பேனசோனிக் (Panasonic), சோனி (Sony) ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றில் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்பீக்கர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 110

பிராண்டு ஜேபிஎல்
அதிகபட்ச அவுட்புட் பவர் 160 வாட்ஸ்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 20000 KHz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத்
ஆடியோ அவுட்புட் மோட் ஸ்டீரியோ

இந்த ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 110 ஸ்பீக்கர் (JBL Party Box 110 Speaker) அமேசான் தளத்தில் ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கூகுள் பிக்சல் 9, 10 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.20,000 வரை சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 320

பிராண்டு ஜேபிஎல்
அதிகபட்ச அவுட்புட் பவர் 240 வாட்ஸ்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 40 Hz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத்
ஆடியோ அவுட்புட் மோட் ஸ்டீரியோ

இந்த ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 320 ஸ்பீக்கர் (JBL Party Box 320 Speaker) அமேசானில் ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோனி எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி800 எக்ஸ் – சீரீஸ்

பிராண்டு சோனி
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 2.4 GHz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத், ஆப்டிக்கல்
ஆடியோ அவுட்புட் மோட் ஸ்டீரியோ, சரவுண்ட்

இந்த சோனி எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி800 எக்ஸ் – சீரீஸ் ஸ்பீக்கர் (Sony SRS – XV800 X Series Speaker) அமேசான் தளத்தில் ரூ.35,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேனசோனிக் எஸ்சி – டிஎம்ஏஎக்ஸ்45

பிராண்டு பேனசோனிக்
அதிகபட்ச அவுட்புட் பவர் 160 வாட்ஸ்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 60 Hz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத், ஆப்டிக்கல்
ஆடியோ அவுட்புட் மோட் ஸ்டீரியோ, ஆப்டிக்கல், யுஎஸ்பி

இந்த பேனசோனிக் எஸ்சி – டிஎம்ஏஎக்ஸ்45 ஸ்பீக்கர் (Panasonic XC DMAX45 Speaker) அமேசான் தளத்தில் ரூ.23,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!

போட் நியூ லாஞ்ச் பார்டிபால் 600 பார்டி

பிராண்டு போட்
டைமன்ஷன் 100.5*41*41.5 சென்டிமீட்டர்கள்
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத்
கம்பேடியபல் டிவைஸ் மைக்ரோபோன்

இந்த போட் நியூ லாஞ்ச் பார்டிபால் 600 பார்டி ஸ்பீக்கர் (Boat New Launch Partypal 600 Party Speaker) அமேசான் தளத்தில் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோனி எம்எச்சி – வி43டி அதிக பவர் பார்டி ஸ்பீக்கர்

பிராண்டு சோனி
இன்புட் வோல்டேஜ் 240 ஓல்ட்ஸ்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 20000 Hz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத், என்எஃப்சி
ஆடியோ அவுட்புட் மோட் சரவுண்ட்

இந்த சோனி எம்எச்சி – வி43டி அதிக பவர் பார்டி ஸ்பீக்கர் (Sony MHC V43D High Power Party Speaker) அமேசான் தளத்தில் ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெப்ரானிக்ஸ் மெட்டல் பவர் ப்ரோ பவர்ஃபுல் டிஜே

பிராண்டு ஜெப்ரானிக்ஸ்
டைமன்ஷன் 49.5*50.5*83 சென்டிமீட்டர்கள்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 20000 Hz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத்
கம்பேடியபல் டிவைஸ் ஸ்மார்ட்போன், டிவி

இந்த ஜெப்ரானிக்ஸ் மெட்டல் பவர் ப்ரோ பவர்ஃபுல் டிஜே ஸ்பீக்கர் (Zebronics Metal Power Pro Powerful DJ Speaker) அமேசான் தளத்தில் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிம்க்க : Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!

ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 710 ப்ளூடூத் ஸ்பீக்கர்

பிராண்டு ஜேபிஎல்
அதிகபட்ச அவுட்புட் 800 வாட்ஸ்
ஃப்ரீகுவன்சி ரெஸ்பான்ஸ் 20000 Hz
இணைப்பு தொழில்நுட்பம் ப்ளூடூத், வயர்லஸ்
ஆடியோ அவுட்புட் மோட் ஸ்டீரியோ

இந்த ஜேபிஎல் பார்டி பாக்ஸ் 710 ப்ளூடூத் ஸ்பீக்கர் (JBL Party Box 710 Bluetooth Speaker)  அமேசான் தளத்தில் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.