Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!
Most Downloaded Apps In Apple App Store | பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 செயலிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அந்த ஸ்மார்ட்போன்களின் தங்களது ஒவ்வொரு தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் விதமாக தனித்தனி செயலிகளையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக பண பரிவர்த்தனை செய்வதற்காக யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள், பயணம் செய்வதற்காக ஓலா (Ola), ஊபர் (Uber) போன்ற செயலிகள், பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் குறித்த தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் என்ன என்ன செயலிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்
2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள 10 செயலிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாட்ஜிபிடி
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் முதலீடம் பிடித்துள்ளது சாட்ஜிபிடி (ChatGPT) செயலி தான். செயற்கை நுண்ணறிவு அம்சத்தை (AI – Artificial Intelligence) கொண்டு செயல்படும் இந்த சாட்ஜிபிடி பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பலரும் சந்தேகங்கள், வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை குறித்து இந்த சாட்ஜிபிடி செயலிகள் மூலம் தகவல்களை பெறுகின்றனர்.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
இன்ஸ்டாகிராம்
உலகம முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலி தான் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலியில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது செயலியாக இது உள்ளது.
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம் செயலியை போலவே அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான செயலி தான் வாட்ஸ்அப் (WhatsApp). இந்த செயலி நிறுவனங்கள், பள்ளிகள் என தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெரும்பாலான நபர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத செயலியாக இது உள்ளது. இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது செயலியாக உள்ளது.
யூடியூப்
என்னதான் தற்போது ஏராளமான ஓடிடி செயலிகள் மற்றும் தளங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் செயலி தான் யூடியூப் (YouTube). இன்றளவும் கூட பொழுதுப்பொக்குக்கு சிறந்த செயலியாக யூடியூப் உள்ளது. இது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நான்காவது செயலியாக உள்ளது.
இதையும் படிங்க : உங்கள் பழைய ஸ்மார்ட்போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
பிளிங்கிட்
வெறும் 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் பல செயலிகள் உள்ளன. கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக பெரும்பாலான பொதுமக்கள் இத்தகைய செயலிகள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது செயலியாக பிளிங்கிட் (Blinkit) உள்ளது.
கூகுள் ஜெமினி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏஐ டிரெண்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதற்காக பலரும் ஏஐ செயலிகளை அதிகம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். இந்த நிலையில் தான், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆறாவது செயலியாக கூகுள் ஜெமினி (Google Gemini) உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார்
தற்போதைய சூழலில் பெரும்பாலான நபர்களுக்கு ஒடிடி செயலிகள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. திரைப்படங்கள், சீரீஸ்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்பதற்காக ஏராளமான ஓடிடி செயலிகள் உள்ளன. இந்த நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏழாவது செயலியாக கூகுள் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) உள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025 : ஒன்பிளஸ் முதல் ஓப்போ வரை.. 2025-ல் அறிமுகமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
கூகுள் மேப்ஸ்
தற்போதைய பரபரப்பான சூழலில் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய செயலிகளில் ஒன்றாக கூகுள் மேப்ஸ் (Google Maps) அமைந்துள்ளது. தெரியாத இடங்களுக்கு பயணம் செய்வது, செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதற்காகவும் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட எட்டாவது செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது.
கூகுள் பே
பொதுமக்களிடையே பண பரிவர்த்தனை முறை முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒன்பதாவது செயலியாக கூகுள் பே (Google Pay) உள்ளது.
கூகுள் சர்ச்
ஏஐ சாட்பாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக அனைவருக்கும் மிகவும் அவசியமான செயலிகளில் ஒன்றாக இருந்தது தான் கூகுள் சர்ச் (Google Search). இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பத்தாவது செயலியாக கூகுள் பே உள்ளது.


