Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

Transform Your Old Smartphone Into Security Camera | பலர் தங்களது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் சில ஆண்டுகளுக்கு பிறகு அதனை அப்படியே விட்டு விடுவர். இதனால் பழைய ஸ்மாட்ர்ட்போன்கள் பயனற்றவையாக இருக்கும். ஆனால், பழைய ஸ்மார்ட்போன்களை வீட்டின் செக்யூரிட்டி கேமராவாக பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Dec 2025 22:05 PM IST
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அன்றாட தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்ட நிலையில், அவற்றை தினமும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஒருசில ஆண்டுகளில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நேரிடுகிறது. 

1 / 5
அவ்வாறு புதிய ஸ்மார்ட்போன் வாங்கப்படும் பட்சத்தில் ஏற்கனவே பயன்படுத்தி பழைய ஸ்மார்ட்போன் எந்த வித பயனும் இல்லாததாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக எலக்ட்ரானிக் கழிவுகளும் அதிகரிக்கிறது. இந்த நிலையில், பயன்படுத்தாத பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள வகையில் வீட்டின் செக்யூரிட்டி கேமராவாக (Security Camera) பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
அதற்கு உங்களுக்கு இரண்டு ஸ்மார்ட்போன்கள் வேண்டும். நீங்கள் எந்த அறையில் செக்யூரிட்டி கேமராவை பொருத்த விரும்புகிறீர்களோ அதற்கு அந்த பழைய ஸ்மார்ட்போனையும், அதனை கண்காணிப்பதற்காக உங்களது புதிய ஸ்மாட்ர்போனையும் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்களால் பழைய ஸ்மார்ட்போனை செக்யூரிட்டி கேமராவாக பயன்படுத்த முடியும். 

3 / 5
அதாவது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஸ்டோருக்கு (Apple Store) சென்று நல்ல பாதுகாப்பான செக்யூரிட்டி கேமரா செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பழைய ஸ்மார்ட்போன் மற்றும் புதிய ஸ்மார்ட்போன் என இரண்டிலும் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அந்த இரண்டு செயலிகளும் ஒரே கணக்கை வைத்து லாக் இன் செய்ய வேண்டும். 

4 / 5
பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நீங்கள் செக்யூரிட்டி கேமராவை பொருத்த நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் பொருத்த வேண்டும். பிறகு உங்களுக்கு தேவையான நேரங்களில் எங்கிருந்து வேண்டுமானாலும் மற்றொரு ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். 

5 / 5