Year Ender 2025 : 2025-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
Amazing 7 New Features Introduced In WhatsApp | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2025-ல் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமான சில அட்டகாசமான அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமற்றம், பொழுதுபோக்கு என பல அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட அசத்தலான 7 அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான அசத்தல் அம்சங்கள்
2025-ல் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா வீடியோ மற்றும் வாய்ஸ் பதில், பாஸ் கீ லாக் இன், அபவுட், ஸ்கிரீன் ஷேரிங், ஃபேவரைட்ஸ் ஆகிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாய்ஸ் மற்றும் வீடியோ பதில்
முன்பெல்லாம் வாட்ஸ்அப்பில் யாரேனும் மிஸ்டு கால் விடுத்திருந்தால் அதனை பார்த்துவிட்டு அந்த நபரை மீண்டும் அழைத்து பேச வேண்டியதாக இருக்கும். இதற்கு தான் மெட்டா வாட்ஸ்அப்பில் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்தது. அதுதான் மிஸ்டு கால்களுக்கு வீடியோ மற்றும் ஆடியோ குறுஞ்செய்தி (Video and Audio Short Message) அனுப்புவது. மிஸ்டு கால்களுக்கு குறுஞ்செதி மூலம் பதிலளிப்பதற்கு பதிலாக இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : திருடப்பட்ட போனின் லொகேஷனை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கும் தெரியுமா?
பாஸ்கி லாக் இன்
முன்பு வாட்ஸ்அப் கணக்கை லாக் இன் செய்ய வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில் தான் பாஸ் கி லாக் இன் (Pass Key Log In) அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்தது. அதாவது இந்த அம்சத்தின் மூலம் ஃபேஸ் அடி, கைரேகை, தரவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுலபமாக லாக் இன் செய்துக்கொள்ளலாம்.
ஏஐ வாய்ஸ் மோட் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு
மெட்டா வாட்ஸ்அப் செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் உள்ள சாட்பாட்டை பயன்படுத்தி கேள்விகளை கேட்கலாம். இந்த அம்சத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும் வகையில் வாய்ஸ் உரையாடல் அம்சத்தை அறிமுகம் செய்தது. அதாவது சாட்பாட் உடன் சாட் செய்வதற்கு பதிலாக குரல் உரையாடலை மேற்கொள்ளும் அம்சத்தை அது வழங்கியது. மேலும் அந்த ஏஐ சாட்பாட்டில் தனியுரிமை பாதுகாப்பு அம்சத்தையும் அறிமுகம் செய்தது. அதாவது இன்காக்னிட்டோ (Incognito) அம்சத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் சில தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எந்த வித அச்சமும் இல்லாமல் தேட முடியும். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் பாதுகாக்கப்படும்.
இதையும் படிங்க : கூகுள் மேப்ஸில் இருக்கும் வண்ண கோடுகளுக்கு இதுதான் அர்த்தம்!
அபவுட் அப்டேட்
வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருந்த அம்சம் தான் அபவுட் (About). இதில் பயனர்கள் தங்களது தற்போதைய நிலையை குறித்து ஒருசில வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதமாக சில ஆப்ஷன்கள் தோன்றும். அதனை ஒருமுறை செட் செய்தால் மீண்டும் அதனை மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். இந்த அம்சத்தில் தான் மெட்டா முக்கிய மாற்றத்தை மேற்கொண்டது. அதாவது, அந்த ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கை கிளிக் செய்யும் பட்சத்தில் அவர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்பது சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்தது. முன்னதாக புரொஃபைல் பக்கத்தின் (Profile Page) கீழே இந்த அம்சம் இருந்த நிலையில், அதனை அந்த நபரின் பெயருக்கு கீழேயே மெட்டா வழங்கியது.
ஸ்கீரீன் ஷேரிங்
2025-ல் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா கொண்டு வந்த முக்கியமான அம்சம் தான் ஸ்கீரீன் ஷேரிங் (Screen Sharing). இந்த அம்சத்தை பயன்படுத்தி வாய்ஸ் கால் பேசிக்கொண்டு இருக்கும்போது உங்களது ஸ்கிரீனை ஷேர் செய்ய முடியும். இதன் குழுவில் உள்ளவர்களுக்கு ஏதேனும் விளக்க வேண்டும் என்றால் கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தாமல் வாட்ஸ்அப்பிலேயே தகவல்களை பகிரும் விதமாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
ஃபேவரைட்ஸ் டேப்
முன்பெல்லாம் ஒருவரின் வாட்ஸ்அப் அழைப்பு பட்டியலில் உள்ள நபர்களில் யாரேக்கேனும் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால் அவரது பெயரை தேர்வு செய்து தான் அனுப்ப வேண்டும். ஆனால், ஃபேவரைட்ஸ் (Favourites) அம்சம் அதனை மிக சுலபமானதாக மாற்றிவிட்டது. அந்த அம்சத்தில் எந்த எண்களை முக்கியமானது என நினைக்கிறார்களோ அந்த பயனர்கள் அந்த எண்களை தேர்வு செய்து ஃபேவரைட்ஸ் பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம். இதன் மூலம் முக்கியமான நபர்கள் மற்றும் குழுக்களின் குறுஞ்செய்திகளை தவற விடாமல் இருக்க முடியும்.
சத்தமில்லாமல் குழுவில் இருந்து வெளியேறலாம்
முன்பு வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால் அது தொடர்பான குறுஞ்செய்தி குழுவில் உள்ள அனைவருக்கும் தோன்றும். ஆனால், வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ள அம்சத்தின் மூலம் குழுவில் உள்ள யாருக்கும் தெரியாமல் அந்த குழுவில் இருந்து வெளியேற முடியும். அதாவது அந்த குழுவின் அட்மினை தவிர வேறு யாருக்கும் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறியது தெரிய வராது.