AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஷ்ரேயாஸ் சதம்! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப்.. லக்னோவை வீழ்த்தி அசத்தல்..!

LSG vs PBKS Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 23ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. பிளே ஆஃப் செல்ல பஞ்சாப் கின்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கட்டாய வெற்றிக்காக களமிறக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

IPL 2026: ஷ்ரேயாஸ் சதம்! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப்.. லக்னோவை வீழ்த்தி அசத்தல்..!
S Iyer Century
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 23 May 2026 23:27 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 23ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. பிளே ஆஃப் செல்ல பஞ்சாப் கின்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கட்டாய வெற்றிக்காக களமிறக்கிய பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி 18 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் சதத்தை அடித்து, கட்டாயம் வெல்ல வேண்டிய இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகள் உயிர்ப்புடன் உள்ளன. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் உள்ளது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் இடம் முக்கியமாக ராஜஸ்தான் – மும்பை போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும்.

ALSO READ: ஸ்பின் ஆக்‌ஷனில் வேகப்பந்து..? க்ருனால் பாண்ட்யா பந்துக்கு காவ்யா மாறன் கொடுத்த ரியாக்‌ஷன்!

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் , முதலில் பேட் செய்த எல்.எஸ்.ஜி அணி 196 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 18 ஓவர்களில் இலக்கை விரட்டிப் பிடித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஆட்டத்தை வெல்லும் சிக்ஸரை அடித்ததுடன், 51 பந்துகளில் தனது முதல் சதத்தையும் அடித்தார்.

பஞ்சாபின் நம்பிக்கை:


பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 லீக் போட்டிகளிலும் விளையாடி, தற்போது 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அவர்களின் நிகர ரன் விகிதம் +0.309 ஆகும். பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற, பஞ்சாப் அணி நாளைய போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். முதலில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைய வேண்டும் என பஞ்சாப் அணி நம்ப வேண்டும். அதன்பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைத் தோற்கடித்தால், அந்த வெற்றி பெரிய வித்தியாசத்தில் இருக்கக்கூடாது என பஞ்சாப் அணி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ALSO READ: பிளே ஆஃப் சுற்றில் ஒரு அணிக்கு மட்டும்.. தோற்றால் 2 வாய்ப்பு.. ஏன் தெரியுமா?

ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் சதம்:

ஷ்ரேயஸ் ஐயர் தனது 12 வருட ஐபிஎல் வாழ்க்கையில் முதல் சதத்தை அடித்தார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் விளாசினார்.

Follow Us