Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான சிறந்த லேப்டாப்கள்.. லிஸ்ட் இதோ!

Best Laptops Introduced In 2025 | 2025-ல் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்தன. அந்த வகையில், 2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட அசத்தலான லேப்டாப்கள் அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான சிறந்த லேப்டாப்கள்.. லிஸ்ட் இதோ!
லேப்டாப்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Dec 2025 13:37 PM IST

பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்கள் என பலருக்கும் லேப்டாப் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் லேப்டாப் தேவை அதிகமாக உள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் லேப்டாப்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் 2025-ல் பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், 2025-ல் அறிமுகமான புதிய வகை லேப்டாப்கள் என்ன என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் அறிமுகமான சிறந்த லேப்டாப்கள் – பட்டியல் இதோ

ஆப்பிள், ஏசர், மைக்ரோசாஃப்ட், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் பல அட்டகாசமான அம்சங்களை கொண்ட லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் 2025 மேக்புக் ஏர் 13 இன்ச்

ஆப்பிள் நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்த அட்டகாசமான லேப்டாப் தான் ஆப்பிள் 2025 மேக்புக் ஏர் 13 இன்ச் (Apple 2025 Macbook Air 13 Inch). இந்த லேப்டாப் 13.6 இன்ச் ஸ்கிரீனை கொண்டுள்ளது. இந்து 256 ஜிபி ஹார்டு டிஸ்க் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், ஆப்பிள் எம்4 சிபியு மாடலை கொண்டுள்ளது. மேக் ஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த லேப்டாப் அமேசானின் ரூ.92,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லேப்டாப் ரூ.1,14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!

ஏசர் ஆஸ்பயர் லைட் ஏஎம்டி ரைசன் 5-5625U

ஏசர் நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்த லேப்டாப் தான் ஏசர் ஆஸ்பயர் லைட் ஏஎம்டி ரைசன் 5-5625U (Acer Aspire Lite AMD Ryzen 5-5626U). இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்கீரின் அளவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 512 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. ரைசன் 5 சிபியு மாடலை கொண்டுள்ள இந்த லேப்டாப், 16 ரேமை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் அமேசானில் ரூ.39,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நியூ சர்ஃபேஸ் ப்ரோ 11த் எடிஷன்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்த லேப்டாப் தான் மைக்ரோசாஃப்ட் நியூ சர்ஃபேஸ் ப்ரோ 11த் எடிஷன் (Microsoft New Surface Pro 11th Edition). இந்த லேப்டாப் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது 13.8 இச்ன் ஸ்கிரீன் அளவை கொண்டுள்ள நிலையில், 2880 * 1920 பிக்சல் பர் இன்ச் ரெசொலுஷனை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் அமேசான் தளத்தில் ரூ.1,15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!

ASUS விவோபுக் 15, இன்டல் கோர் ஐ3 – 1315U 13th ஜென்

அசுஸ் நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்தது தான் இந்த அசுஸ் விவோபிக் 15, இன்டல் கோர் ஐ3 – 1315U 13த் ஜென் லேப்டாப் (Intel Core i3 1315U 13th Gen). இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்கீரின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 512 ஜிபி ஹார்டு டிஸ்க் அம்சத்தையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் ஆபரேட்டிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் அமேசானில் ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எச்பி 15எஸ், 12த் ஜென் இன்டல் கோர் ஐ3 – 1215U

2025-ல் எச்பி அறிமுகம் செய்த அட்டகாசமான லேப்டாப்பாக எச்பி 15எஸ் 12த் ஜென் இன்டல் கோர் ஐ3 – 1215U (HP 15S 12th Gen Intel Core i3 – 1215U) உள்ளது. இந்த லேப்டாப் 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. கோர் ஐ3 சிபியு மாடலை கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அமேசான் தளத்தில் ரூ.32,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்கம் : Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!

எச்பி ஸ்மார்ட் சாய்ஸ் ஓமன் ஏஎம்டி ரைசன் 77840 ஹெச்எஸ்

2025-ல் அறிமுகமான எச்பி நிறுவனத்தின் லேப்டாப் தான் எச்பி ஸ்மார்ட் சாய்ஸ் ஓமன் ஏஎம்டி 77840 ஹெச்எஸ் (HP Smart Choice Oman AMD 77840 HS) லேப்டாப். இந்த லேப்டாப்பில் 16.1 செண்டி மீட்டர் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. ரைசன் 7 சிபியு மாடலை கொண்டுள்ள இந்த லேப்டாப், 1 டிஜி ஹார்டு டிஸ்க் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் 16 ஜிபி ரேமையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் அமேசான் தளத்தில் ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.