Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிஜிட்டல் கைது மோசடி.. பெண்ணிடம் இருந்து ரூ.52 லட்சத்தை சுருட்டிய நபர்.. பகீர் சம்பவம்!

Woman Lost 52 Lakhs In Digital Arrest Scam | இந்தியாவில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.52 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடி.. பெண்ணிடம் இருந்து ரூ.52 லட்சத்தை சுருட்டிய நபர்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Dec 2025 14:55 PM IST

வைத்திக்குப்பம், டிசம்பர் 14 : புதுச்சேரி (Puducherry) வைத்திக்குப்பம் வகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் கால் வந்துள்ளது. அந்த பெண்ணும் அந்த அழைப்பை ஏற்று பேசியுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய நபர் தான் டெல்லியை சேர்ந்த போலீஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் தொலைபேசி எண் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் அதிர்ச்சியூட்டு தகவலை கூறியுள்ளார்.

டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என கூறி பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர்

அதன் காரணமாக அந்த பெண்ணை டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்துள்ளதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணமா?, அதனை நாங்கள் சோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார். மேலும், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க : பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!

தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்துக்கொண்டவர், தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தன் காரணமாக அந்த பெண் பயந்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த நபர் கூறிய படியே தனது வங்கி கணக்கில் இருந்த சுமார் 52 லட்சம் பணத்தையும்  அந்த பெண், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பெண்ணின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பிய பின் அந்த பெண் அந்த எண்ணை மீண்டும் தொடர்ப்புக்கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் தொடர்ப்புக்கொள்ள முடியாமல் போயுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பெண்ணை கட்டி போட்டு நகை மற்றும் பணம் கொள்ளை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!

இந்தியாவில் சமீப காலமாகவே இந்த டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு டிஜிட்டல் கைது என்ற ஒன்று இல்லை என்றும், இத்தகைய மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.